கிரிக்கெட்

ராஜ்கோட் டெஸ்ட் : வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகள் மள மள வென சரிவு 94/6 + "||" + Day 2: West Indies trail by 555 runs with 4 wickets remaining in the innings

ராஜ்கோட் டெஸ்ட் : வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகள் மள மள வென சரிவு 94/6

ராஜ்கோட் டெஸ்ட் : வெஸ்ட்  இண்டீஸ் விக்கெட்டுகள் மள மள வென சரிவு 94/6
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ்க்கு விக்கெட்டுகள் மள மள வென சரிந்து உள்ளது.
ராஜ்கோட்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. அறிமுக வீரர் பிரித்வி ஷா சதத்தால் இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் குவித்தது. விராட் கோலி 72 ரன்னுடனும், ரிஷப் பந்த் 17 ரன்னுடனும் களத்தில் நின்றிருந்தனர்.


இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. விராட் கோலி சிறப்பாக விளையாடி தனது 24-வது சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் ரிஷப் பந்த் வாணவேடிக்கை நிகழ்த்தினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 84 பந்தில் 92 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஜடேஜா தனது சொந்த மைதானத்தில் ஆதிரடியை வெளிப்படுத்தினார். விராட் கோலி (139), அஸ்வின் (7), குல்தீப் யாதவ் (12), உமேஷ் யாதவ் (22) ஆதரவு கொடுக்க ஜடேஜா 128 பந்தில் 99 ரன்னை தொட்டார். 150-வது ஓவரின் 4-வது பந்தில் ஒரு ரன் எடுத்து தனது முதல் சதத்தை அடித்தார் ஜடேஜா.

149.5 ஓவரில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் குவித்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஜடேஜா 100 ரன்னுடனும், முகமது ஷமி 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் தேவேந்திர பிஷூ அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

தனது முதல் இன்னிங்ஸை ஆடிவரும் மேற்கிந்திய தீவுகள் 6 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 12 ரன்கள் சேர்த்துள்ளது.94 ரன்கள் எடுப்பதற்குள்  வெஸ்ட் இண்ட்டிஸ் 6 விக்கெட்டுகளை இழந்து உள்ளது.