கிரிக்கெட்

தொடர்ந்து 3-வது ஆண்டாக டெஸ்டில் ஆயிரம் ரன்கள் - கோலி சாதனை + "||" + He has a thousand runs in the Test 3rd year - Kohli record

தொடர்ந்து 3-வது ஆண்டாக டெஸ்டில் ஆயிரம் ரன்கள் - கோலி சாதனை

தொடர்ந்து 3-வது ஆண்டாக டெஸ்டில் ஆயிரம் ரன்கள் - கோலி சாதனை
தொடர்ந்து 3-வது ஆண்டாக டெஸ்டில் ஆயிரம் ரன்களை கடந்து கோலி சாதனை படைத்தார்.
ராஜ்கோட்,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 139 ரன்கள் எடுத்து, தனது 24-வது சதத்தை எட்டிய இந்திய கேப்டன் விராட் கோலி பல்வேறு சாதனைகளை தன்வசப்படுத்தினார். அதன் விவரம் வருமாறு:-

* இந்திய வீரர்களில் டெஸ்டில் அதிக சதங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் 4-வது இடத்தில் இருந்த ஷேவாக்கை (23 சதம்) கோலி பின்னுக்கு தள்ளியுள்ளார்.


* 72-வது டெஸ்டில் விளையாடும் விராட் கோலி 123 இன்னிங்சில் பேட்டிங் செய்து 24 சதங்களை அடித்துள்ளார். இதன் மூலம் 24 சதங்களை அதிவேகமாக எட்டிய 2-வது வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார். ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான்பிராட்மேன் 66 இன்னிங்சில் இந்த இலக்கை எட்டியதே சாதனையாக நீடிக்கிறது. இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் தனது 24-வது சதத்தை 125-வது இன்னிங்சில் அடித்திருந்தார். அவரை இப்போது கோலி முந்திவிட்டார்.

* விராட் கோலி இந்த ஆண்டில் இதுவரை 4 சதம், 4 அரைசதங்கள் உள்பட 1,018 ரன்கள் (9 டெஸ்ட்) சேர்த்துள்ளார். இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் கோலி தான். அவருக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (10 டெஸ்டில் 719 ரன்) இருக்கிறார்.

* 29 வயதான விராட் கோலி தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஒவ்வொரு சீசனிலும் டெஸ்டில் ஆயிரம் ரன்களை கடந்து பிரமாதப்படுத்தியுள்ளார். ஏற்கனவே 2016-ம் ஆண்டில் 1,215 ரன்களும், 2017-ம் ஆண்டில் 1,059 ரன்களும் எடுத்துள்ளார். இதன் மூலம் தொடர்ச்சியாக 3 ஆண்டுகளில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்தியர், ஒட்டுமொத்த அளவில் 6-வது வீரர் என்ற மகிமையை பெற்றார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் (தொடர்ந்து 5 ஆண்டு), ஸ்டீவன் சுமித் (4 ஆண்டு), வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா, இங்கிலாந்தின் டிரஸ்கோதிக், கெவின் பீட்டர்சன்(தலா 3 ஆண்டு) ஆகியோர் இச்சாதனையை செய்திருக்கிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. அயர்லாந்துக்கு எதிரான டெஸ்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 147 ரன்கள் இலக்கு
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 147 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2. வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி
வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்றது.
3. இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து அணி 178 ரன்னில் ஆல்-அவுட்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 178 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
4. இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: ஜோ ரூட் சதத்தால் சரிவை சமாளித்தது இங்கிலாந்து
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் ஜோ ரூட்டின் சதத்தால் இங்கிலாந்து அணி சரிவை சமாளித்தது.
5. வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: ஜிம்பாப்வே 304 ரன்னில் ஆல்-அவுட்
வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஜிம்பாப்வே 304 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

ஆசிரியரின் தேர்வுகள்...