கிரிக்கெட்

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் - இன்று தொடக்கம் + "||" + Australia-Pakistan first Test cricket - starting today

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் - இன்று தொடக்கம்

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் - இன்று தொடக்கம்
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்க உள்ளது.
துபாய்,

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று தொடங்குகிறது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய புகாருக்கு ஆளாகி ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னருக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்ட பிறகு ஆஸ்திரேலிய அணி விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.

டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் அறிமுக வீரர்களாக ஆரோன் பிஞ்ச், டிராவிஸ் ஹெட், மார்னுஸ் லாபஸ்சாக்னே ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். பாகிஸ்தான் அணி சர்ப்ராஸ் அகமது தலைமையில் களம் காணுகிறது. இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.