கிரிக்கெட்

வெளிநாட்டு தொடர்களுக்கான பயணம்: இந்திய வீரர்கள் மனைவியுடன் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் - கேப்டன் கோலி கோரிக்கை + "||" + Tour to foreign seasons: Indian players should be allowed to stay with their wife - Captain Kohli demand

வெளிநாட்டு தொடர்களுக்கான பயணம்: இந்திய வீரர்கள் மனைவியுடன் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் - கேப்டன் கோலி கோரிக்கை

வெளிநாட்டு தொடர்களுக்கான பயணம்: இந்திய வீரர்கள் மனைவியுடன் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் - கேப்டன் கோலி கோரிக்கை
வெளிநாட்டு பயணத்தில் தொடர் முடிவடையும் வரை, இந்திய வீரர்கள் மனைவியுடன் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என கேப்டன் கோலி கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது வீரர்கள் 2 வாரங்கள் வரை மட்டுமே தங்களது மனைவி அல்லது காதலியை தங்களுடன் தங்கவைத்துக் கொள்ளலாம். அதன் பிறகு திருப்பி அனுப்பி விட வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் புதிய விதியை அமல்படுத்தியது. இந்த நிலையில் இந்த விதியை மாற்றி, வெளிநாட்டில் விளையாடும் போது, அந்த தொடர் நிறைவடையும் வரை தங்களுடன் மனைவி மற்றும் குடும்பத்தாரை தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று வீரர்கள் சார்பில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய கோரிக்கை வைத்துள்ளார்.


இது குறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தரப்பில் கேட்ட போது, ‘வெளிநாட்டு பயணத்தின் போது தொடர் முடிவடையும் வரை மனைவியை உடன் வைத்துக் கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோலி கோரிக்கை வைத்துள்ளது உண்மை தான். ஆனால் அது குறித்து தற்சமயம் எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை. இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வான பிறகு அவர்களின் முடிவுக்கு விட்டுவிடப்போகிறோம். அதனால் ஏற்கனவே உள்ள விதிமுறையில் இப்போது எந்த மாற்றமும் இருக்காது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த வெளிநாட்டு பயணம் நவம்பர் 21-ந்தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய அணி 20 ஓவர் போட்டி, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. சேலத்தை சேர்ந்தவர் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம்
மோட்டார் சைக்கிளை பயன்படுத்தாமல் சைக்கிளில் சென்று, பெட்ரோலை சேமித்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம் என்பதனை வலியுறுத்தியும், சாதனைக்காகவும் நாடு முழுவதும் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வருகிறார்.
2. பாராளுமன்றம் நோக்கி 5–ந்தேதி பேரணி: தஞ்சையில் இருந்து விவசாயிகள் டெல்லி பயணம்
பாராளுமன்றம் நோக்கி வருகிற 5–ந்தேதி பேரணி செல்வதற்காக தஞ்சையில் இருந்து விவசாயிகள் டெல்லி பயணம் மேற்கொண்டனர்.
3. மத்திய அரசை கண்டித்து நடைபெற உள்ள பேரணியில் பங்கேற்க விவசாயிகள் டெல்லி பயணம்
மத்திய அரசை கண்டித்து அனைத்திந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்லியில் நடைபெற உள்ள பேரணியில் பங்கேற்க கும்பகோணத்தில் இருந்து விவசாயிகள் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றனர்.
4. ஜோதிட நம்பிக்கையால் தினமும் 350 கி.மீட்டர் பயணம் மேற்கொள்ளும் கர்நாடக மந்திரி
கர்நாடகத்தில் மந்திரி ரேவண்ணா துரதிர்ஷ்டத்தில் இருந்து தப்பிக்க ஜோதிடர் ஆலோசனைப்படி தினமும் 350 கி.மீட்டர் தொலைவுக்கு பயணம் செய்கிறார்.
5. புத்தகம் படிக்கும் வயதில் கத்தியை பிடிப்பதா?
சமீபத்தில் சென்னையில் கல்லூரி தொடங்கிய முதல் நாளில் பட்டாக்கத்திகளுடன் மாணவர்கள் பஸ்சில் பயணம் செய்து போலீசில் பிடிபட்ட சம்பவம் பெற்றோர்கள் மட்டுமில்லாமல் கல்வியாளர்களிடமும் கதிகலங்க வைத்திருக்கிறது.