கிரிக்கெட்

அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது விபத்தில் சிக்கினார், ஹைடன் + "||" + Matthew Hayden: Cricketer fractures spine in surfing accident

அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது விபத்தில் சிக்கினார், ஹைடன்

அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது விபத்தில் சிக்கினார், ஹைடன்
அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் விபத்தில் சிக்கினார்.
குயின்ஸ்லாந்து,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன் விடுமுறையை கழிப்பதற்காக தனது குடும்பத்தினருடன் குயின்ஸ்லாந்து நகருக்கு சென்றுள்ளார். அங்குள்ள நார்த் ஸ்டிராட்புரோக் தீவுக்கு சென்ற ஹைடன் கடலில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அடுக்கடுக்காக வந்த அலையில் சிக்கிக் கொண்ட ஹைடன் விபத்தில் சிக்கி தூக்கி வீசப்பட்டார். அலையில் அடித்து செல்லப்பட்ட அவர் அருகில் உள்ள மணல் திட்டில் தள்ளப்பட்டார். தலை, முகம், கழுத்து மற்றும் முதுகு தண்டில் காயம் அடைந்து நகர முடியாமல் தவித்த ஹைடனை அரு கில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 46 வயதான ஹைடன் காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.


இது தொடர்பாக அவர் தனது பதிவில், ‘மிகப்பெரிய ஆபத்தில் இருந்து கடவுளின் அருளால் தப்பி இருக்கிறேன். அரை டஜனுக்கு அதிகமான ராட்சத அலைகள் அடுத்தடுத்து வந்ததில் சிக்கி இழுத்து செல்லப்பட்டேன். எலும்பு முறிவுகள் ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. விபத்தில் சிக்கிய எனக்கு உதவியவர்களுக்கும், எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் மீண்டும் அலைச்சறுக்கு விளையாட்டுக்கு திரும்புவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபத்து: இலங்கையில் 30 பேர் சாவு
இலங்கையில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர்.
2. தளவாய்பாளையம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து டிரைவர்-கிளனர் உயிர்தப்பினர்
கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது. பின்னர் அந்த லாரி சாலையோரம் இருந்த சிறிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
3. தனியார் பஸ்களை அதிவேகமாக ஓட்டினால் உரிமம் ரத்து - போலீசார் எச்சரிக்கை
தேனி, அம்மையநாயக்கனூர் அருகே தனியார் பஸ்களால் விபத்து ஏற்பட்டதையடுத்து அதிவேகமாக பஸ்களை ஓட்டினால் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
4. கும்பகோணத்தில் குடோனில் தீ விபத்து; ரூ.4 லட்சம் எலக்ட்ரிக் பொருட்கள் எரிந்து நாசம்
கும்பகோணத்தில் உள்ள குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரிக் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.
5. திருச்சி அருகே பெயிண்ட் கடை-குடோனில் பயங்கர தீ விபத்து
திருச்சி அருகே பெயிண்ட் கடை மற்றும் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.