கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: வெஸ்ட்இண்டீஸ் அணி அறிவிப்பு + "||" + One Day Against India, T20 Series: West Indies Team Announcement

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: வெஸ்ட்இண்டீஸ் அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: வெஸ்ட்இண்டீஸ் அணி அறிவிப்பு
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான வெஸ்ட்இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டது.
ஆன்டிகுவா,

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான வெஸ்ட்இண்டீஸ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கிறிஸ் கெய்ல், வெய்ன் பிராவோ, சுனில் நரின் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது.


இதனை அடுத்து இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையே 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடர் நடைபெறுகிறது. முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் வருகிற 21-ந் தேதியும், 2-வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் 24-ந் தேதியும், 3-வது ஒருநாள் போட்டி புனேயில் 27-ந் தேதியும், 4-வது ஒருநாள் போட்டி மும்பையில் 29-ந் தேதியும், 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நவம்பர் 1-ந் தேதியும் நடக்கிறது. முதலாவது 20 ஓவர் போட்டி கொல்கத்தாவில் நவம்பர் 4-ந் தேதியும், 2-வது 20 ஓவர் போட்டி லக்னோவில் நவம்பர் 6-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி சென்னையில் நவம்பர் 11-ந் தேதியும் நடக்கிறது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடருக்கான வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியை, அந்த நாட்டு கிரிக்கெட் வாரிய தேர்வு குழுவினர் நேற்று அறிவித்தனர். ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் போட்டியில் விளையாடி வரும் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் தனிப்பட்ட காரணத்துக்காக அணி தேர்வில் தனது பெயரை பரிசீலனை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதை தொடர்ந்து அவர் பெயர் இடம் பெறவில்லை. ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோ, சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் ஆகியோருக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை. காயம் காரணமாக ஆந்த்ரே ரஸ்செல் ஒருநாள் அணியில் சேர்க்கப்படவில்லை. ஆனால் 20 ஓவர் போட்டி அணியில் அவர் இடம் பிடித்துள்ளார்.

பேட்ஸ்மேன் டேரன் பிராவோ, ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்ட் ஆகியோர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். கடைசியாக டேரன் பிராவோ 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும், கீரன் பொல்லார்ட் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியிலும் அணியில் இடம் பெற்று இருந்தனர்.

ஒருநாள் போட்டி அணியில் அறிமுக வீரர்களாக தொடக்க ஆட்டக்காரர் சந்தர்பால் ஹேம்ராஜ், ஆல்-ரவுண்டர் பாபியன் ஆலென், வேகப்பந்து வீச்சாளர் ஒஷானே தாமஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இதில் பாபியன் ஆலென், ஒஷானே தாமஸ் ஆகியோருக்கு 20 ஓவர் அணியிலும் இடம் கிடைத்து இருக்கிறது.

20 ஓவர் போட்டிக்கான அணியில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஒபெட் மெக்காய், இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஷாரி பிர்ரே, அதிரடி ஆட்டக்காரர் ரூதர்போர்ட் ஆகியோர் புதுமுக வீரர்களாக இடத்தை வசப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்திய சுற்றுப்பயணத்துக்கான வெஸ்ட்இண்டீஸ் ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணி விவரம் வருமாறு:-

வெஸ்ட்இண்டீஸ் ஒருநாள் அணி: ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), பாபியன் ஆலென், சுனில் அம்ப்ரிஸ், தேவேந்திர பிஷூ, சந்தர்பால் ஹேம்ராஜ், ஹெடிம்யேர், ஷாய் ஹோப், அல்ஜாரி ஜோசப், இவின் லீவிஸ், ஆஷ்லே நர்ஸ், கீமோ பால், ரோவ்மன் பவெல், கெமார் ரோச், சாமுவேல்ஸ், ஒஷானே தாமஸ்.

வெஸ்ட்இண்டீஸ் 20 ஓவர் அணி: கார்லோஸ் பிராத்வெய்ட் (கேப்டன்), பாபியன் ஆலென், டேரன் பிராவோ, ஹெடிம்யேர், இவின் லீவிஸ், ஒபெட் மெக்காய், ஆஷ்லே நர்ஸ், கீமோ பால், ஹாரி பிர்ரே, கீரன் பொல்லார்ட், ரோவ்மன் பவெல், தினேஷ் ராம்டின், ஆந்த்ரே ரஸ்செல், ரூதர்போர்ட், ஒஷானே தாமஸ்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவும், பூடானும் இயற்கையான நண்பர்கள் - பல்கலைக்கழக மாணவர்களிடம் பிரதமர் மோடி பெருமிதம்
இந்தியாவும், பூடானும் இயற்கையான நண்பர்கள் என்று பூடான் பல்கலைக்கழக மாணவர்களிடையே பிரதமர் மோடி பேசினார்.
2. பாகிஸ்தானுடன் இனி ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டும்தான் பேச்சு - இந்தியா திட்டவட்டம்
பாகிஸ்தானுடன் இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரச்சினை பற்றி மட்டும்தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இந்தியா திட்டவட்டமாக கூறி உள்ளது.
3. சம்ஜவ்தா, தார் எக்ஸ்பிரஸ் ரெயில்களை மீண்டும் இயக்க பாகிஸ்தான் மறுப்பு
சம்ஜவ்தா, தார் எக்ஸ்பிரஸ் ரெயில்களை மீண்டும் இயக்க இந்தியா விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் மறுத்துள்ளது என செய்தி வெளியாகியுள்ளது.
4. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 250 ரன்னில் ‘ஆல்-அவுட்’
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 250 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. ஸ்டீவன் சுமித்தை ‘பவுன்சர்’ பந்து தாக்கி கீழே சரிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்
காஷ்மீர் விவகாரம் முற்றிலும் இந்தியாவின் உள் விவகாரம் என்று ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநித் கூறினார்.