கிரிக்கெட்

தமிழ்நாட்டு கடற்கரையின் புகைப்படமா? காயமடைந்த மேத்யூ ஹைடனை கிண்டல்டித்த ஜாண்டி ரோட்ஸ் + "||" + Is it a photograph of the coast of Tamil Nadu? Wounded Matthew Hyattan Kiddie Jandy Rhodes

தமிழ்நாட்டு கடற்கரையின் புகைப்படமா? காயமடைந்த மேத்யூ ஹைடனை கிண்டல்டித்த ஜாண்டி ரோட்ஸ்

தமிழ்நாட்டு கடற்கரையின் புகைப்படமா? காயமடைந்த மேத்யூ ஹைடனை கிண்டல்டித்த  ஜாண்டி ரோட்ஸ்
அலைச்சறுக்கின் போது படுகாயமடைந்த மேத்யூ ஹைடனின் புகைப்படத்தை பார்த்த முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ், அவரை மோசமான விதத்தில் கிண்டல் செய்துள்ளார்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன், விடுமுறையை கொண்டாட சென்ற இடத்தில் அலைச்சறுக்கில் ஈடுபட்டபோது படுகாயமடைந்தார். அதன் பின்னர் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

மேலும் தனக்கு ஆதரவாக இருந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி எனவும், இதுதான் தனது கடைசி கவன ஈர்ப்பு பதிவு எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் கூறி இருப்பதாவது;-

மேத்யூ உங்கள் தலையில் இருப்பது தமிழ்நாட்டு கடற்கரையின் புகைப்படமா? எங்களைப் போன்ற மென்மையானவர்கள் எல்லாம் எளிதாக டாட்டூ போட்டுக் கொள்கிறோம். ஆனால் உங்களைப் போன்றவர்கள் உண்மையான பொறுப்புடன் செயல்படுகிறீர்கள்’ என கிண்டல் செய்யும் வகையில் பதிவிட்டுள்ளார்.

மேத்யூ ஹைடன், தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியில் வர்ணனையாளராக இருந்திருக்கிறார். அதன் காரணமாக ஜாண்டி ரோட்ஸ் இவ்வாறு கிண்டல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.