ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி வெற்றி


ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி வெற்றி
x
தினத்தந்தி 10 Oct 2018 9:34 PM GMT (Updated: 10 Oct 2018 9:34 PM GMT)

ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

ஈஸ்ட் லண்டன்,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஈஸ்ட் லண்டனில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அறிமுக வீரர் வான்டெர் துஸ்சென் 56 ரன்களும், டேவிட் மில்லர் 39 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி, தென்ஆப்பிரிக்க பவுலர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 17.2 ஓவர்களில் 126 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் தென்ஆப்பிரிக்க அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பீட்டர் மூர் 44 ரன்கள் (21 பந்து, ஒரு பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை பெற்றார். 2-வது 20 ஓவர் போட்டி போட்செப்ஸ்ட்ரூமில் நாளை இரவு 9.30 மணிக்கு நடக்கிறது.

Next Story