இலங்கை - இங்கிலாந்து 2-வது ஆட்டத்தில் இன்று மோதல்


இலங்கை - இங்கிலாந்து 2-வது ஆட்டத்தில் இன்று மோதல்
x
தினத்தந்தி 12 Oct 2018 9:15 PM GMT (Updated: 12 Oct 2018 7:08 PM GMT)

இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கிடையே 2-வது ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.



இலங்கைக்கு சென்றுள்ள இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி தம்புல்லாவில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story