கிரிக்கெட்

விராட் கோலி முதலிடத்தில் நீடிப்பு + "||" + Virat Kohli in the first place, Ext

விராட் கோலி முதலிடத்தில் நீடிப்பு

விராட் கோலி முதலிடத்தில் நீடிப்பு
டெஸ்ட் தரவரிசையில் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் சதம் விளாசிய இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங் தரவரிசையில் 936 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இதே டெஸ்டில் அறிமுகமாகி 134 ரன்கள் குவித்த இந்திய இளம் வீரர் பிரித்வி ஷாவுக்கு 73-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

துபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் சதம் அடித்து தங்களது அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றிய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா 9 இடங்கள் எகிறி 10-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் ஓராண்டு தடையை அனுபவித்து வரும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை தவற விட்டதன் மூலம் 10 புள்ளிகளை இழந்துள்ளார். இருப்பினும் 919 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடருகிறார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதல் 5 இடங்களில் முறையே இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன், தென்ஆப்பிரிக்காவின் ரபடா, பிலாண்டர், இந்தியாவின் ஜடேஜா, நியூசிலாந்தின் டிரென்ட் பவுல்ட் ஆகியோர் உள்ளனர். அஸ்வின் 8-வது இடம் வகிக்கிறார். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 16 இடங்கள் உயர்ந்து 52-வது இடத்தை பிடித்துள்ளார்.