கிரிக்கெட்

2வது டெஸ்ட் போட்டி: 2வது நாளில் இந்தியா 117/3; பிரித்வி ஷா அரை சதம் + "||" + 2nd Test Match: India 117/3 on 2nd Day; Prithvi Shah hits half century

2வது டெஸ்ட் போட்டி: 2வது நாளில் இந்தியா 117/3; பிரித்வி ஷா அரை சதம்

2வது டெஸ்ட் போட்டி:  2வது நாளில் இந்தியா 117/3; பிரித்வி ஷா அரை சதம்
2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா அரை சதம் எடுத்துள்ளார்.
ஐதராபாத்,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா விளையாடும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதன்படி கீரன் பவெலும், கிரேக் பிராத்வெயிட்டும் வெஸ்ட் இண்டீசின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர்.

அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணி 113 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை (38.5 ஓவர்) இழந்திருந்தது.  இந்த சூழலில் 6-வது விக்கெட்டுக்கு ஆல்-ரவுண்டர் ரோஸ்டன் சேசும், விக்கெட் கீப்பர் ஷேன் டாவ்ரிச்சும் கைகோர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 95 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் சேர்த்திருந்தது. ரோஸ்டன் சேஸ் 98 ரன்களுடனும் (174 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), தேவேந்திர பிஷூ 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இந்த நிலையில் இன்று நடந்த 2வது நாள் ஆட்டத்தில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ரன்கள் எடுத்துள்ளது.  இன்று 16 ரன்களே எடுக்கப்பட்டது.  இந்தியாவின் குல்தீப் 88 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதனை அடுத்து விளையாடிய இந்திய அணியின் ராகுல் (4) ரன்களில் வெளியேறினார்.  இந்திய அணி உணவு இடைவேளை வரை ஒரு விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்திருந்தது.  பிரித்வி (52), புஜாரா (9) ரன்கள் எடுத்திருந்தனர்.

இந்நிலையில், தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா (70) ஒரு சிக்சர் மற்றும் 11 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்து ஆட்டமிழந்துள்ளார்.  புஜாரா (10) ரன்களில் வெளியேறினார்.

இந்திய அணியின் விராட் கோஹ்லி (13), ரஹானே (5) ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.  22 ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ரன்களுடன் விளையாடி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை தோற்கடித்து ஆப்கானிஸ்தான் அணி முதல் வெற்றி
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆப்கானிஸ்தான் அணி முதல் வெற்றியை ருசித்தது.
2. முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி 715 ரன்கள் குவித்து டிக்ளேர் - இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வங்காளதேசம் போராட்டம்
வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி 715 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது.