கிரிக்கெட்

ராகுல் ஜோரி மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஒருவாரத்திற்குள் விளக்கம் அளிக்க பிசிசிஐ நிர்வாக குழு உத்தரவு + "||" + Committee of Administrators of the BCCI asks Rahul Johri to submit his explanation within a week over the sexual harassment allegations made against him.

ராகுல் ஜோரி மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஒருவாரத்திற்குள் விளக்கம் அளிக்க பிசிசிஐ நிர்வாக குழு உத்தரவு

ராகுல் ஜோரி மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஒருவாரத்திற்குள் விளக்கம் அளிக்க  பிசிசிஐ நிர்வாக குழு உத்தரவு
ராகுல் ஜோரி மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஒருவாரத்திற்குள் விளக்கம் அளிக்க பிசிசிஐ நிர்வாக குழு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,

வேலை பார்க்கும் இடங்களிலும் , பிற இடங்களிலும் ஆண்களால் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகள் குறித்து சமீப காலமாக பெண்கள் தைரியமாக புகார் கூறி வருகின்றனர். சர்வதேச அளவில் ‘மீடூ’ என்ற பெயரில் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் கடந்த சில நாட்களாக இப்படிப்பட்ட புகார்கள் குவிந்து வருகின்றன.

இதில் சினிமாத்துறையில் பணியாற்றும் ஏராளமான பெண்கள் ‘மீ டூ’ என்ற பெயரில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்து வருகின்றனர். எனினும் அரசியல் துறையையும் இது விட்டு வைக்கவில்லை. அந்த வகையில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பரும் இந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார். 

இதனால் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்திய கிரிக்கெட் துறையிலும் முதல் மீடூ குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய  (பிசிசிஐ) தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோரி இத்தகைய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. 

2016 -ஏப்ரல் முதல் பிசிசிஐ. தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றும் ஜோரி  பத்திரிகையாளர் பெயரிடப்பட்ட  ஒருவரால் குற்றம்சாட்டப்பட்டு உள்ளார்.
அடையாளத்தை வெளிபடுத்தாத அந்த  பெண் ஒரு பத்திரிகையாளராக இருந்தார். இருவரும் வெவ்வேறு ஊடக நிறுவனங்களுக்கு வேலை செய்தபோது நிகழ்ந்த ஒரு சம்பவத்தைப் குறிபிட்டு உள்ளார்.  ஜோரியின்  பாலியல் தவறான நடத்தை பற்றி குற்றம் சாட்டி உள்ளார். 

பிசிசிஐ நிர்வாகி புகார் எழுந்தது, இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பிய நிலையில், தன் மீதான குற்றச்சாட்டு குறித்து ஒருவாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ நிர்வாக குழு ராகுல் ஜோரிக்கு உத்தரவிட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. எம்.ஜே. அக்பருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பரிசீலிக்கப்படும்- அமித் ஷா
மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் புகார் குறித்து பரிசீலிக்கப்படும் என பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கூறி உள்ளார். #METOO
2. தென்னிந்திய திரையுலகில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானேன் - அனேகன் பட நடிகை
பிரபல திரைப்பட நடிகையான அமைரா தஸ்தூர் தென்னிந்திய திரையுலகில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகியிருப்பதாக கூறியுள்ளார்.
3. ஐகோர்ட்டு நீதிபதி மீது பாலியல் புகார்: பதவி விலகிய பெண் நீதிபதி வழக்கு - ம.பி. ஐகோர்ட்டு பதிவாளருக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
ஐகோர்ட்டு நீதிபதி மீது பாலியல் புகார் கூறி பதவி விலகிய பெண் நீதிபதி வழக்கில், மத்திய பிரதேச ஐகோர்ட்டு பதிவாளருக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
4. நடிகை தனுஸ்ரீதத்தா பாலியல் புகார்: நானா படேகரை கைது செய்ய கோரி மகளிர் காங்கிரசார் போராட்டம்
நடிகை தனுஸ்ரீதத்தா கொடுத்த பாலியல் புகாரில் நடிகர் நானா படேகரை கைது செய்ய கோரி மகளிர் காங்கிரசார் போலீஸ் நிலையம் முன் போராட்டம் நடத்தினார்கள்.
5. நடிகர் முகேஷ் விளக்கம் “பெண் டைரக்டரை படுக்கைக்கு அழைத்தது நான் அல்ல”
பெண் டைரக்டரை படுக்கைக்கு அழைத்தது நான் அல்ல என்று நடிகர் முகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.