கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி + "||" + One Day Against Sri Lanka: England team win

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி
இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது.

தம்புல்லா, 

இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் சேர்த்தது. கேப்டன் இயான் மோர்கன் (92 ரன், 91 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்), ஜோ ரூட் (71 ரன்) அரைசதம் அடித்தனர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 300 ரன்களை தாண்டுவது போல் சென்ற நிலையில் அவர்களை கட்டுப்படுத்திய இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 5 விக்கெட்டுகளை கபளீகரம் செய்தார். 2014–ம் ஆண்டுக்கு பிறகு அவர் ஒரு நாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 29 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது. அப்போது தனஞ்ஜெயா டி சில்வா (36 ரன்), திசரா பெரேரா (44 ரன்) களத்தில் இருந்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் ‘டக்வொர்த்–லீவிஸ்’ விதிமுறை பின்பற்றப்பட்டது. இதன்படி 29 ஓவர்களில் இலங்கை அணி 172 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். இதனால் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 3–வது ஒரு நாள் போட்டி வருகிற 17–ந்தேதி கண்டியில் நடக்கிறது.