ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி மீண்டும் வெற்றி


ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி மீண்டும் வெற்றி
x
தினத்தந்தி 13 Oct 2018 9:15 PM GMT (Updated: 13 Oct 2018 8:33 PM GMT)

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

போட்செப்ஸ்ட்ரூம், 

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா–ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று முன்தினம் நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, தென்ஆப்பிரிக்க வீரர்களின் அபார பந்து வீச்சை சமாளித்து ரன் எடுக்க முடியாமல் திணறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 41 ரன்னும், பிரன்டன் டெய்லர் 29 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். பின்னர் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டுமினி 33 ரன்னுடனும், டேவிட் மில்லர் 19 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி 2–0 என்ற கணக்கில் போட்டி தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பினோனியில் இன்று நடக்கிறது.


Next Story