விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: மும்பை–பீகார் அணிகள் கால்இறுதியில் இன்று மோதல்


விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: மும்பை–பீகார் அணிகள் கால்இறுதியில் இன்று மோதல்
x
தினத்தந்தி 13 Oct 2018 9:30 PM GMT (Updated: 13 Oct 2018 8:37 PM GMT)

விஜய்ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

பெங்களூரு, 

விஜய்ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 37 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் மும்பை, மராட்டியம், டெல்லி, ஆந்திரா, ஐதராபாத், அரியானா, ஜார்கண்ட், பீகார் ஆகிய அணிகள் கால்இறுதிக்கு முன்னேறின.

பெங்களூருவில் இன்று காலை 9 மணிக்கு நடக்கும் முதலாவது கால்இறுதியில் மும்பை–பீகார் அணிகள் மோதுகின்றன. மும்பை அணிக்காக ரோகித் சர்மா ஆட இருப்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு கால்இறுதியில் டெல்லி–அரியானா அணிகள் சந்திக்கின்றன.


Next Story