கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் 282 ரன்களில் ஆல்-அவுட் + "||" + 2nd Test against Australia: Pakistan all out in 282 runs

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் 282 ரன்களில் ஆல்-அவுட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் 282 ரன்களில் ஆல்-அவுட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 282 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
அபுதாபி,

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ‘டிரா’ ஆன நிலையில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அபுதாபியில் நேற்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் காயமடைந்த இமாம் உல்-ஹக், வஹாப் ரியாஸ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக அறிமுக வீரர்களாக பஹார் ஜமான், மிர் ஹம்சா சேர்க்கப்பட்டனர்.


‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தானுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் முகமது ஹபீஸ் 4 ரன்னில், மிட்செல் ஸ்டார்க்கின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் பஹார் ஜமான் ஒரு பக்கம் போராட, மறுபுறம் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. அசார் அலி (15 ரன்), ஹாரிஸ் சோகைல் (0), ஆசாத் ஷபிக் (0), பாபர் அசாம் (0) ஆகியோர் நாதன் லயனின் சுழலில் சிக்கி சிதறினர். 57 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து பாகிஸ்தான் நெருக்கடிக்குள்ளானது.

இதையடுத்து பஹார் ஜமானுடன், கேப்டன் சர்ப்ராஸ் அகமது கைகோர்த்து அணியை வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுத்தனர். அணியின் ஸ்கோர் 204 ரன்களாக உயர்ந்த போது, பஹார் ஜமான் 94 ரன்னில் (198 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) சுழற்பந்து வீச்சாளர் லபஸ்சானேவின் பந்து வீச்சில் எல்.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி ஜமான் அப்பீல் செய்தும் பலன் இல்லை. அறிமுக போட்டியிலேயே பாகிஸ்தான் வீரர் ஒருவர் 90 முதல் 99 ரன்னுக்குள் ஆட்டம் இழப்பது இது 4-வது நிகழ்வாகும். சர்ப்ராஸ் அகமதுவும் சதத்தை தவற விட்டார். லபஸ்சானேவின் பந்து வீச்சில் சிக்சர் அடித்து சதம் அடிக்க நினைத்து சற்று விலகியபடி பந்தை தூக்கியடித்தார். சரியாக ‘கிளிக்’ ஆகாத அது கேட்ச்சாக மாறியது. சர்ப்ராஸ் அகமதுவும் 94 ரன்களுடன் (129 பந்து, 7 பவுண்டரி) வெளியேறினார். பின்வரிசையில் யாசிர் ஷா (28 ரன், 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) மட்டும் கணிசமான பங்களிப்பை அளித்தார்.

முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 81 ஓவர்களில் 282 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் 4 விக்கெட்டுகளும், மார்னஸ் லபஸ்சானே 3 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணியில், முந்தைய டெஸ்டின் ‘ஹீரோ’ உஸ்மான் கவாஜா 3 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அடுத்து விக்கெட் தடுப்பாளராக இறக்கி விடப்பட்ட பீட்டர் சிடில் 4 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 20 ரன்கள் எடுத்துள்ளது. ஆரோன் பிஞ்ச் 13 ரன்னுடன் களத்தில் உள்ளார். இரு விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ் கைப்பற்றினார். 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவில் பரிதாபம்: வீட்டில் வளர்த்த மான் தாக்கி ஒருவர் சாவு - மனைவி கவலைக்கிடம்
ஆஸ்திரேலியாவில் வீட்டில் வளர்த்த மான் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் அவரது மனைவி கவலைக்கிடமாக உள்ளார்.
2. இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய ஏரி
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள ஏரி ஒன்று இயற்கையாக இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியுள்ளது.
3. பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
4. பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றிபெற்றது.
5. இலங்கைக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி சூப்பர் ஓவரில் வெற்றி
இலங்கைக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.