கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்ப்பு + "||" + One day cricket against West Indies: Umesh Yadav has been replaced by Shardul Thakur in the Indian squad

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்ப்பு

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்ப்பு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் இரண்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் தேர்வாகி இருந்தார். ஆனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டின் போது அறிமுக வீரராக இடம் பிடித்திருந்த ஷர்துல் தாகூர், வெறும் 10 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் வலது தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் வெளியேறினார். அதன் பிறகு அவர் மேற்கொண்டு பந்து வீசவில்லை.


இந்த நிலையில் ஒரு நாள் போட்டி அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டு இருக்கிறார். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் வாய்ப்பு பெறாத உமேஷ் யாதவ், டெஸ்ட் தொடரில் அசத்தியதால் ஒரு நாள் போட்டி அணிக்கு திரும்புகிறார்.தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ‘போட்டி தொடரை முழுமையாக இழந்தது மோசமானதாகும்’ - வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் கருத்து
‘இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை நாங்கள் முழுமையாக இழந்தது மோசமானதாகும்’ என்று வெஸ்ட்இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெய்ட் தெரிவித்தார்.
2. ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டெஸ்ட்: முஷ்பிகுர் ரஹிம் இரட்டை சதத்தால் வங்காளதேச அணி 522 ரன்கள் குவிப்பு
ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், முஷ்பிகுர் ரஹிம் இரட்டை சதத்தால் வங்காளதேச அணி 522 ரன்கள் குவித்தது.
3. நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்டிலும் பாகிஸ்தான் அணி வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
4. ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: வங்காளதேச அணிக்கு 321 ரன்கள் இலக்கு
ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், வங்காளதேச அணிக்கு 321 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
5. வெஸ்ட் இண்டீஸ் 109 ரன்னில் சுருண்டது: முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி
கொல்கத்தாவில் நடந்த முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 109 ரன்களுக்குள் சுருட்டிய இந்திய அணி, அந்த இலக்கை போராடி எட்டிப்பிடித்தது.