கிரிக்கெட்

ஸ்மித், வார்னர் இல்லாவிட்டாலும் ஆஸ்திரேலிய தொடர் சமபலம் மிக்கதாக இருக்கும்: புவனேஷ் குமார் + "||" + New-look Australia make Bhuvneshwar Kumar a touch wary

ஸ்மித், வார்னர் இல்லாவிட்டாலும் ஆஸ்திரேலிய தொடர் சமபலம் மிக்கதாக இருக்கும்: புவனேஷ் குமார்

ஸ்மித், வார்னர் இல்லாவிட்டாலும் ஆஸ்திரேலிய தொடர் சமபலம் மிக்கதாக இருக்கும்: புவனேஷ் குமார்
ஸ்மித், வார்னர் இல்லாவிட்டாலும் ஆஸ்திரேலிய தொடர் சமபலம் மிக்கதாக இருக்கும் என்று புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான புவனேஷ்குமார் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:- “ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாவிட்டால் கூட ஆஸ்திரேலியத் தொடர் நிச்சயம் சவாலானதாகவே இருக்கும். 

ஏனென்றால், நாம் நாட்டைவிட்டு வெளிநாட்டில் விளையாடுகிறோம். எனவே காலச்சூழல் வேறுவேறாக இருக்கும்.  எந்தச் சூழலுக்கும் உடனடியாக மாறிப் பந்துவீசுவது என்பது பந்துவீச்சாளர்களுக்கு எளிதானது அல்ல. ஸ்மித், வார்னர் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி பலமுறை சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலய வீரர்களுக்கு உள்நாட்டு மைதானம் என்பதால், அவர்களுக்குக் காலநிலையும், சூழலும் எளிதாக இருக்கும். ஆனால், நம்மைப் பொருத்தவரை ஸ்மித், வார்னர் இல்லாவிட்டாலும்கூட ஆஸ்திரேலியத் தொடர் சவால் நிறைந்ததாகவே இருக்கிறது. 

 நீண்டதொடர்களில் விளையாடிவிட்டு வரும் போது, ஓய்வு என்பது அவசியமாகும். மனதீரியாக நாம் சோர்வடைந்துவிடுவோம். போதுமான ஓய்வு அளிக்கும் போது, அடுத்த போட்டித்தொடருக்கு தயாராக உதவியாக இருக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்தார். 


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியா மீண்டும் சாம்பியன் (1999)
1999ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
2. ஆஸ்திரேலியாவில் விதிமுறை மீறிய இந்திய உணவகத்துக்கு ரூ.12½ லட்சம் அபராதம்
ஆஸ்திரேலியாவில் விதிமுறை மீறிய இந்திய உணவகத்துக்கு ரூ.12½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
3. ஆஸ்திரேலியாவில் பரபரப்பு: பிரதமர் மீது முட்டை வீசிய பெண்
ஆஸ்திரேலியாவில் பிரதமர் மீது முட்டை வீசிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
4. ஆஸ்திரேலியாவில் பரிதாபம்: வீட்டில் வளர்த்த மான் தாக்கி ஒருவர் சாவு - மனைவி கவலைக்கிடம்
ஆஸ்திரேலியாவில் வீட்டில் வளர்த்த மான் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் அவரது மனைவி கவலைக்கிடமாக உள்ளார்.
5. ஐபிஎல் தொடரின் கடைசி சில போட்டிகளில் வார்னர், ஸ்மித் விளையாடும் வாய்ப்பு குறைவு
ஐபிஎல் தொடரின் கடைசி சில போட்டிகளில் வார்னர், ஸ்மித் விளையாட மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.