கிரிக்கெட்

முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில்இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்கவுகாத்தியில் நடக்கிறது + "||" + First one day cricket match India-West Indies teams face today Walking in Guadium

முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில்இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்கவுகாத்தியில் நடக்கிறது

முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில்இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்கவுகாத்தியில் நடக்கிறது
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று நடக்கிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இரண்டு டெஸ்டிலும் அந்த அணி 3 நாளுக்கு மேல் தாக்குப்பிடிக்கவில்லை.

அடுத்ததாக இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

டெஸ்ட் தொடரை மிக எளிதில் வென்ற இந்திய அணியினர் ஒரு நாள் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தும் வேட்கையுடன் தயாராக உள்ளனர். இந்த போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணியின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி 21 வயதான ரிஷாப் பான்ட், ஒரு பேட்ஸ்மேனாக இடம் பிடித்துள்ளார். டெஸ்ட் தொடரில் அசத்தியதை தொடர்ந்து ஒரு நாள் போட்டியிலும் அவர் முதல்முறையாக அடியெடுத்து வைக்கிறார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பெரிய அளவில் சோபிக்காத மூத்த வீரர் டோனி, பேட்டிங்கில் பழைய நிலைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறார். மிடில் வரிசை தான் இந்திய அணிக்கு கவலைக்குரிய அம்சமாக தொடர்கிறது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில், அதை நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியமாகும். மிடில் வரிசைக்கு பொருத்தமான வீரர்களை அடையாளம் காண்பதற்கு இந்த தொடர் உதவிகரமாக இருக்கும்.


கேப்டன் விராட் கோலி, தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஆகியோர் புதிய மைல்கல்லை நோக்கி பயணிக்கிறார்கள். கோலி 221 ரன்கள் எடுத்தால் ஒரு நாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்த சாதனையாளர்களின் வரிசையில் இணைவார். அத்துடன் 187 ரன்கள் எடுத்தால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இந்தியர் என்ற சாதனையை தெண்டுல்கரிடம் இருந்து தட்டிப்பறித்து விடுவார். தவான் இந்த தொடருக்குள் 177 ரன்கள் சேர்த்தால் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை எட்டிய இந்தியர் என்ற சிறப்பை பெறுவார். பந்து வீச்சில் முகமது ஷமி, உமேஷ் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் மிரட்டுவார்கள்.

பொதுவாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் குறுகிய வடிவிலான போட்டிகளில் நன்றாக ஆடுவார்கள். ஆனால் இந்த ஒரு நாள் தொடரில் கிறிஸ் கெய்ல், இவின் லீவிஸ், பிராவோ சகோதரர்கள், ஆந்த்ரே ரஸ்செல் உள்ளிட்ட அதிரடி சூரர்கள் இல்லை. மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரினும் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் அந்த அணி பலவீனமாகவே தென்படுகிறது. மர்லன் சாமுவேல்ஸ் மட்டுமே அனுபவமிக்க வீரர் ஆவார். அவரைத்தான் அந்த அணி மலைபோல் நம்பி இருக்கிறது. இளம் வீரர்களை கொண்ட அணியாக இருந்தாலும் அவர் களை குறைத்து மதிப்பிட முடியாது. ஏனெனில் கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம்.


கவுகாத்தி பார்சபரா ஸ்டேடியத்தில் ஒரு நாள் போட்டி அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும். இது பகல்-இரவு மோதல் என்பதால் 2-வது பேட்டிங்கின் போது பனிப்பொழிவின் தாக்கம் நிச்சயம் இருக்கும்.

போட்டிக்கான இரண்டு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, ரிஷாப் பான்ட், டோனி (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், உமேஷ் யாதவ், முகமது ஷமி அல்லது கலீல் அகமது.

வெஸ்ட் இண்டீஸ்: சுனில் அம்ப்ரிஸ், கீரன் பவெல், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), ஹெடிம்யேர், சாமுவேல்ஸ், ரோவ்மன் பவெல், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ஆஷ்லே நர்ஸ், கீமோ பால், தேவேந்திர பிஷூ, அல்ஜாரி ஜோசப் அல்லது கெமார் ரோச்.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.