கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி மூன்று ஒரு நாள் போட்டி:இந்திய அணியில் புவனேஷ்வர்குமார், பும்ரா + "||" + Bhuvaneswar Kumar and Bumra in the Indian team

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி மூன்று ஒரு நாள் போட்டி:இந்திய அணியில் புவனேஷ்வர்குமார், பும்ரா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி மூன்று ஒரு நாள் போட்டி:இந்திய அணியில் புவனேஷ்வர்குமார், பும்ரா
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி மூன்று ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணிக்கு புவனேஷ்வர்குமார், பும்ரா திரும்புகிறார்கள்.
புதுடெல்லி,

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இதுவரை இரண்டு ஆட்டங்கள் நடந்துள்ளன. எஞ்சிய மூன்று போட்டிகள் முறையே புனே (அக்.27), மும்பை (அக்.29), திருவனந்தபுரம் (நவ.1) ஆகிய இடங்களில் நடக்கிறது.

கடைசி மூன்று ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பணிச்சுமை காரணமாக 4 வாரங்கள் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர். முதல் இரு ஆட்டங்களில் 81 மற்றும் 59 ரன்களை வாரி வழங்கிய முகமது ஷமி கழற்றி விடப்பட்டுள்ளார். அதே சமயம் உமேஷ் யாதவ் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். ஆச்சரியம் அளிக்கும் வகையில், காயத்தில் இருந்து மீண்டு தியோதர் கோப்பை போட்டியில் சிறப்பாக ஆடிய கேதர் ஜாதவின் பெயரை தேர்வு குழுவினர் பரிசீலிக்கவில்லை. மேலும் சில உள்ளூர் போட்டிகளில் அவர் விளையாடிய பிறகு தேசிய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி வருமாறு:- விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, ரிஷாப் பான்ட், டோனி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், பும்ரா, கலீல் அகமது, உமேஷ் யாதவ், லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே.

20 ஓவர் போட்டி

ஒரு நாள் தொடர் நிறைவடைந்ததும் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுடன் மூன்று 20 ஓவர் போட்டிகளில் ஆடுகிறது. அதன் பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று முதலில் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இந்த ஆறு 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி புனேயில் இன்று அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கு மட்டும் கேப்டன் விராட் கோலி விரும்பினால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அர்ஜூனா விருதுக்கு ஜடேஜா, முகம்மது சமி, பும்ரா ஆகிய கிரிக்கெட் வீரர்கள் பெயர் பரிந்துரை
அர்ஜூனா விருதுக்கு ஜடேஜா, முகம்மது சமி, பும்ரா ஆகிய கிரிக்கெட் வீரர்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.