கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்து வீச முடிவு + "||" + India vs West Indies, Live Score 3rd ODI: India Elect To Bowl As Bhuvneshwar, Bumrah Return

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்து வீச முடிவு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்து வீச முடிவு
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச முடிவு செய்துள்ளது.
புனே,

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. கவுகாத்தியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2–வது ஆட்டம் சமனில் (டை) முடிந்தது. இருப்பினும் தொடரில் இந்திய அணி 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் மோதும் 3–வது ஒரு நாள் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்று (சனிக்கிழமை) பகல்–இரவு மோதலாக நடக்கிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணியை முதலில் பேட் செய்யுமாறு பணித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது. இந்திய அணியில்,  முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா, புவனேஷ்குமார் அணிக்கு திரும்பி இருப்பது கூடுதல் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணி வெற்றி
வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. WIVsENG