‘கடைசி 10 ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம்’– கோலி


‘கடைசி 10 ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம்’– கோலி
x
தினத்தந்தி 27 Oct 2018 9:15 PM GMT (Updated: 27 Oct 2018 8:13 PM GMT)

‘முதல் 35 ஓவர்களில் ஆடுகளம் பந்து வீச்சுக்கு பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை.

புனே, 

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3–வது ஆட்டத்தில் தோல்வி கண்ட பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:–

‘முதல் 35 ஓவர்களில் ஆடுகளம் பந்து வீச்சுக்கு பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை. அப்படிப்பட்ட நிலையிலும் நாங்கள் நன்றாக பந்து வீசினோம் என்றே நினைக்கிறேன். ஆனால் கடைசி 10 ஓவர்களில் கொஞ்சம் அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம். 8 விக்கெட்டுக்கு 227 ரன்களுடன் இருந்த அவர்களை 250 முதல் 260 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். இருப்பினும் இது எடுக்கக்கூடிய இலக்கு தான். சரியான பார்ட்னர்ஷிப் அமையாதது பின்னடைவை ஏற்படுத்தியது. வெஸ்ட் இண்டீஸ் அதிரடியாக ஆடக்கூடிய அணி. அவர்களுக்குரிய நாளாக அமைந்து விட்டால் எந்த அணியையும் சாய்த்து விடுவார்கள். இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள்.

ஹர்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ் போன்ற ஆல்–ரவுண்டர்கள் இருக்கும் போது பந்து வீச்சுக்கும் அவர்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். கேதர் ஜாதவ் அடுத்த ஆட்டத்திற்கு வரும் போது அணியின் கலவை சரியானதாக அமையும்.

சாமுவேல்சின் பந்து வீச்சை நொறுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவரது பந்து வீச்சில் அவுட் ஆகி விட்டேன். மொத்தத்தில் களத்தில் எங்களது வியூகத்தை துல்லியமாக செயல்படுத்த தவறி விட்டோம். இதை சரியாக செய்ய வேண்டியது அவசியமாகும்’

இவ்வாறு கோலி கூறினார்.


Next Story