கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி வெற்றி தொடரையும் கைப்பற்றியது + "||" + Against Australia 20 Over cricket: Pakistan win The sequel was also captured

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி வெற்றி தொடரையும் கைப்பற்றியது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி வெற்றி தொடரையும் கைப்பற்றியது
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

துபாய், 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

பாகிஸ்தான் அணி வெற்றி

ஆஸ்திரேலியா–பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று முன்தினம் நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 45 ரன்னும் (44 பந்துகளில் 3 பவுண்டரியுடன்), முகமது ஹபீஸ் 40 ரன்னும் (34 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன்) எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் கவுல்டர் நிலே 3 விக்கெட்டும், ஸ்டான்லேக் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 52 ரன்னும் (37 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன்), நாதன் கவுல்டர் நிலே 27 ரன்னும் (17 பந்துகளில் 3 சிக்சருடன்), மிட்செல் மார்ஷ் 21 ரன்னும் (23 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ‌ஷதாப் கான், ‌ஷஹீன்ஷா அப்ரிடி தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். 4 ஓவர்கள் பந்து வீசி 8 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர் இமாத் வாசிம் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தொடரையும் கைப்பற்றியது

3–வது ஓவரில் இமாத் வாசிம் வீசிய கடைசி பந்தை ஆரோன் பிஞ்ச் அடுத்து ஆடினார். அந்த பந்து இமாத் வாசிம் கையில் பட்டு எதிர்முனையில் உள்ள ஸ்டம்பை தாக்கியது. அப்போது எதிர்முனையில் நின்ற டார்சி ஷார்ட் பேட்டை கிரீசில் வைக்காததால் ரன்–அவுட் ஆனதாக அறிவிக்கப்பட்டது. 3–வது நடுவரின் இந்த முடிவுக்கு டார்சி ஷார்ட் அதிருப்தி தெரிவித்து நடுவருடன் வாக்குவாதம் செய்து விட்டு வெளியேறினார்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 2–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அபுதாபியில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் பாகிஸ்தான் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இரு அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

ஆரோன் பிஞ்ச் கேப்டனாக நியமனம்

இதற்கிடையில் அடுத்த மாதம் நடைபெறும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடருக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியில் இருந்து டிம் பெய்ன் நீக்கப்பட்டு இருப்பதுடன், அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக 20 ஓவர் அணியின் கேப்டனாக இருக்கும் ஆரோன் பிஞ்ச் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.தொடர்புடைய செய்திகள்

1. சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் பெறும் நிதி உதவி விவரங்களை கோரும் சர்வதேச நாணயம் நிதியம்
சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் பெறும் நிதி உதவி விவரங்களை சர்வதேச நாணயம் நிதியம் கோரி உள்ளது என தகவல்கள் கூறுகின்றன.
2. பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி திரில் வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 4 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
3. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்து 153 ரன்னில் சுருண்டது
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து 153 ரன்னில் சுருண்டது.
4. பாகிஸ்தான்: இந்திய மீனவர்கள் 12 பேர் கைது
பாகிஸ்தானின் கடல் பாதுகாப்பு படையினர் மூலம், இந்திய மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி 2–வது வெற்றி பாகிஸ்தானை வீழ்த்தியது
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2–வது வெற்றியை பெற்றது.