கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் தோல்வி + "||" + The Australian team has again failed to play in over 20 overs against Pakistan

பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் தோல்வி

பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் தோல்வி
பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் தோல்வியடைந்தது.
துபாய்,

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று முன்தினம் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 50 ரன்னும் (40 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), பர்ஹான் 39 ரன்னும் (38 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன்), முகமது ஹபீஸ் ஆட்டம் இழக்காமல் 32 ரன்னும் (20 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) எடுத்தனர். பின்னர் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 19.1 ஓவர்களில் 117 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் வீரர்கள் ஷதாப் கான் ஆட்டநாயகன் விருதையும், பாபர் அசாம் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. ஏற்கனவே நடந்த டெஸ்ட் போட்டி தொடரிலும் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் வென்று இருந்தது. இந்த போட்டி தொடர் முடிவில் வெளியிடப்பட்ட 20 ஓவர் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 4 இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. பயங்கரவாத ஊடுருவலை தடுக்க இதுவரை எதுவும் செய்யவில்லை? இம்ரான்கான் நம்பகத்தன்மை உடையவரா?
பயங்கரவாத ஊடுருவலை தடுக்க இதுவரை எதுவும் செய்யவில்லை. இம்ரான்கான் நம்பகத்தன்மை உடையவரா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
2. உலகைச்சுற்றி
பாகிஸ்தானின் பிரபல பெண் எழுத்தாளர் கலிதா ஹூசைன் உடல் நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார்.
3. பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 262 ரன்னில் ஆல்-அவுட்
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், தென்ஆப்பிரிக்க அணி 262 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
4. பாகிஸ்தானில் உள்ள ‘பஞ்ச தீர்த்தம்’ தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு
பாகிஸ்தானில் உள்ள ‘பஞ்ச தீர்த்தம்’ தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5. பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 4 பேர் படுகாயம்
பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 4 பேர் படுகாயம் அடைந்தனர்.