கிரிக்கெட்

7 மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு சிக்கல் + "||" + 7 State Cricket Association in Trouble

7 மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு சிக்கல்

7 மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு சிக்கல்
7 மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி சார்பில் 10-வது நிலவர அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘லோதா கமிட்டி சிபாரிசின் படி மாநில கிரிக்கெட் சங்கங்களின் விதிமுறையில் திருத்தம் செய்து பதிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அரியானா, இமாச்சலபிரதேசம், கர்நாடகா, குஜராத், மேகாலயா, நாகலாந்து, அருணாச்சல பிரதேசம் ஆகிய 7 மாநில கிரிக்கெட் சங்கங்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.

 இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தலில் அந்த 7 மாநிலத்துக்கும் ஓட்டுரிமையை தடை செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் பல மாநிலங்கள் ஒருசில சிபாரிசுகளை மட்டும் தான் ஏற்றுள்ளன. அந்த மாநில கிரிக்கெட் சங்கங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு குறை தீர்ப்பாளர், நெறிமுறை அதிகாரி ஆகியோரை விரைவில் நியமிக்க வேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மீதான விசாரணையை நவம்பர் 27-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்ற-சட்டமன்ற இடைத்தேர்தலில் ஈடுபடவுள்ள கூட்டுறவுத்துறை ஊழியர்களை துறை சார்ந்த பணிகளையும் ஆற்ற நிர்ப்பந்திக்க கூடாது
நாடாளுமன்ற-சட்டமன்ற இடைத்தேர்தலில் ஈடுபடவுள்ள கூட்டுறவுத்துறை ஊழியர்களை, துறை சார்ந்த பணிகளையும் ஆற்ற நிர்ப்பந்திக்க கூடாது என்று சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.