கிரிக்கெட்

கலீல் அகமதுவுக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை + "||" + ICC Cricket Warning khalil ahmad

கலீல் அகமதுவுக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை

கலீல் அகமதுவுக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை
இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவை ஐ.சி.சி. எச்சரித்துள்ளது.
துபாய்,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் சாமுவேல்சின் (18 ரன்) விக்கெட்டை வீழ்த்திய போது, ‘வெளியே போ’ என்று சைகை காட்டினார். எதிரணி வீரரை கோபமூட்டும் வகையில் நடந்து கொண்டதாக கலீல் அகமதுவை எச்சரித்துள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அவருக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளியும் விதித்துள்ளது.