கிரிக்கெட்

2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு டோனி கட்டாயம் தேவை - கவாஸ்கர் + "||" + Dhoni must needs the 2019 World Cup match - Gavaskar

2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு டோனி கட்டாயம் தேவை - கவாஸ்கர்

2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு டோனி கட்டாயம் தேவை - கவாஸ்கர்
2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு டோனி கட்டாயம் தேவை என கவாஸ்கர் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘டோனியின் அனுபவமும், ஆலோசனைகளும் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு தேவைப்படுகிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு டோனி கட்டாயம் தேவை. ஒரு நாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை களம் கண்ட உடனே அதிரடி காட்ட வேண்டும் என்பதில்லை.

டோனி களம் காணும் போது, சற்று நிலைத்து நின்று ஆடுவதற்கு காலஅவகாசம் உள்ளது. பீல்டிங்கின் போது, அவ்வப்போது தேவையான சிறுசிறு மாற்றங்களை அவர் செய்கிறார். பந்து வீச்சாளர்களிடம் இந்தியில் பேசி, பந்தை எங்கு எப்படி பிட்ச் செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார். இவை எல்லாம் கோலிக்கு அனுகூலமான விஷயமாகும்.

இதே போல் ரோகித் சர்மா சிறந்த கேப்டனாக உருவெடுத்து வருகிறார் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். நன்கு சிந்தித்து, திட்டமிட்டு செயல்படுவதில் முன்னேற்றம் கண்டுள்ளார். ரஹானேவிடமும் கேப்டன்ஷிப் திறமைகள் உள்ளன. இவர்களாலும் கோலிக்கு உதவ முடியும். எனவே தான் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து டோனியை விடுவித்து இருப்பதாக கருதுகிறேன்’ என்றார்.


ஆசிரியரின் தேர்வுகள்...