கிரிக்கெட்

‘வீரர்கள் மனைவியை உடன் அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும்’ - விராட்கோலி வேண்டுகோள் + "||" + 'Players must allow their wife to be taken with them' - Virat kohli Request

‘வீரர்கள் மனைவியை உடன் அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும்’ - விராட்கோலி வேண்டுகோள்

‘வீரர்கள் மனைவியை உடன் அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும்’ - விராட்கோலி வேண்டுகோள்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, வீரர்கள் மனைவியை உடன் அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று விராட்கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மும்பை,

12-வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு (2019) மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினருக்கு செய்து தர வேண்டிய வசதிகள் குறித்து கேப்டன் விராட்கோலி, இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியிடம் பல்வேறு கோரிக்கைகளை விடுத்து இருக்கிறார்.

தற்போது அந்த விவரம் வெளியாகி இருக்கிறது. உலக கோப்பை போட்டியின் போது இந்திய அணி வீரர்கள் தங்களது மனைவி மற்றும் பெண் தோழியை உடன் அழைத்து சென்று தங்களுடன் தங்க வைத்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று அந்த வேண்டுகோளில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக கோப்பை போட்டியில் விளையாட செல்லும் போது இந்திய வீரர்கள் அங்குள்ள நகரங்களுக்கு ரெயிலில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அப்போது வீரர்கள் பாதுகாப்பாக செல்ல தனி ரெயில் பெட்டியை முன்பதிவு செய்து தர வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார்.

குறிப்பாக வெளிநாட்டு பயணத்தின் போது வீரர்களுக்கு அங்கு கிடைக்கும் பழம் மற்றும் உணவுகள் வழங்கப்படுவது வாடிக்கையாகும். அப்படி இல்லாமல் இந்திய வீரர்கள் சாப்பிடும் உணவு மற்றும் பழங்களை வழங்க வழிவகை செய்ய வேண்டும். குறிப்பாக வாழைப்பழம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழைப்பழம் உடனடியாக ஊட்டத்தையும், புத்துணர்ச்சியையும் அளிக்கக்கூடியதாகும் என்றும் விராட்கோலி குறிப்பிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 2 வீரர்கள் பலி
ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் தரை இறங்கும்பொழுது ஏற்பட்ட விபத்தில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
2. ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்தது; 13 வீரர்கள் காயம்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் தெற்கே ராணுவ வாகனம் ஒன்று கவிழ்ந்ததில் 13 வீரர்கள் காயமடைந்து உள்ளனர்.
3. சோமாலியாவில் ராணுவ தளம் மீது தற்கொலை கார் வெடிகுண்டு தாக்குதல்; 27 வீரர்கள் பலி
சோமாலியா நாட்டில் ராணுவ தளத்தின் மீது நடந்த தற்கொலை கார் வெடிகுண்டு தாக்குதலில் 27 வீரர்கள் கொல்லப்பட்டனர்.