து ளி க ள்


து ளி க ள்
x
தினத்தந்தி 3 Nov 2018 10:15 PM GMT (Updated: 3 Nov 2018 7:09 PM GMT)

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு- மத்திய பிரதேச அணிகள் இடையிலான லீக் ஆட்டம் நத்தத்தில் நடந்து வருகிறது.

*ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கடந்த மூன்று சீசன்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகராக செயல்பட்ட இந்திய முன்னாள் வீரர் ஷேவாக், அதில் இருந்து விலகியுள்ளார். இத்துடன் பஞ்சாப் அணியுடனான தனது பங்களிப்பு முடிவுக்கு வருவதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

*பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் அரைஇறுதியில் காரென் கச்சனோவ் (ரஷியா) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் டொமினிக் திம்மை (ஆஸ்திரியா) வீழ்த்தினார். கச்சனோவ் இறுதிப்போட்டியில் ஜோகோவிச் அல்லது பெடரர் ஆகியோரில் ஒருவரை சந்திப்பார்.

*சியல்ஹெட்டில் நேற்று தொடங்கிய வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்துள்ளது. சீன் வில்லியம்ஸ் 88 ரன்களில் கேட்ச் ஆனார்.

*ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு- மத்திய பிரதேச அணிகள் இடையிலான லீக் ஆட்டம் நத்தத்தில் (திண்டுக்கல்) நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் மத்தியபிரதேச அணி 393 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. 3-வது நாளான நேற்று தமிழக அணி பேட்டிங் செய்ய இருந்த நிலையில், மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

*‘யோ-யோ’ உடல்தகுதி சோதனை அடிப்படையில் வீரர்களை நீக்குவது நியாயமற்றது என்று இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் கூறியுள்ளார்.

Next Story