கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி அபார வெற்றி, தொடரையும் கைப்பற்றியது + "||" + 2nd ODI against New Zealand: Pakistan won the match and the series

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி அபார வெற்றி, தொடரையும் கைப்பற்றியது

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி அபார வெற்றி, தொடரையும் கைப்பற்றியது
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
துபாய்,

பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக காலின் முன்ரோ, கோரி ஆண்டர்சன் தலா 44 ரன்கள் எடுத்தனர்.


அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாபர் அசாம் 40 ரன்களும், ஆசிப் அலி 38 ரன்களும், முகமது ஹபீஸ் ஆட்டம் இழக்காமல் 34 ரன்களும் விளாசினர்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டித் தொடரை 2-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. அபுதாபியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டு இருந்தது. 20 ஓவர் போட்டித் தொடரை பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக 11-வது முறையாக வென்றுள்ளது. அத்துடன் 20 ஓவர் போட்டியில் 11 ஆட்டங்களில் தொடர்ச்சியாக இலக்கை வெற்றிகரமாக விரட்டிப்பிடித்து (சேசிங்) பாகிஸ்தான் சாதனை படைத்துள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி துபாயில் இன்று நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்து மசூதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பழிவாங்க இலங்கையில் தாக்குதல் : அமைச்சர் தகவல்
நியூசிலாந்து மசூதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பழிவாங்கவே இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என இலங்கை துணை பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2. நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு: ஆஸ்திரேலிய பயங்கரவாதிக்கு மன நல பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு
நியூசிலாந்தில் மசூதி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ஆஸ்திரேலிய பயங்கரவாதிக்கு மன நல பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3. நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் வில்லியம்சனுக்கு மூன்று விருது
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் ஆண்டுதோறும் கிரிக்கெட்டில் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.
4. நியூசிலாந்தில் துப்பாக்கிகள் விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்து அந்நாட்டு பிரதமர் நடவடிக்கை
நியூசிலாந்தில் துப்பாக்கிகள் விற்பனைக்கு கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்து அந்நாட்டு பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
5. மசூதி தாக்குதல் எதிரொலி: நியூசிலாந்தில் துப்பாக்கி வைத்திருக்க கடும் கட்டுப்பாடு
மசூதிகளில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, நியூசிலாந்தில் மக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க மந்திரிசபை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.