கிரிக்கெட்

பிராட்மேனின் சராசரியை தவிர்த்து கிரிக்கெட்டில் அனைத்து சாதனைகளையும் கோலி முறியடிப்பார் - ஸ்டீவ்வாக் கணிப்பு + "||" + In addition to Bradman's score, Kohli will break all records in cricket - Stewalk prediction

பிராட்மேனின் சராசரியை தவிர்த்து கிரிக்கெட்டில் அனைத்து சாதனைகளையும் கோலி முறியடிப்பார் - ஸ்டீவ்வாக் கணிப்பு

பிராட்மேனின் சராசரியை தவிர்த்து கிரிக்கெட்டில் அனைத்து சாதனைகளையும் கோலி முறியடிப்பார் - ஸ்டீவ்வாக் கணிப்பு
பிராட்மேனின் சராசரியை தவிர்த்து, கிரிக்கெட்டில் அனைத்து சாதனைகளையும் கோலி முறியடிப்பார் என ஸ்டீவ்வாக் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டை நேசித்து விளையாடுகிறார். தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்ற வெறி, உத்வேகம், ஆர்வம், ஆக்ரோஷம், உடல்தகுதி எல்லாமே அவரிடம் இருக்கிறது. கடுமையான காயங்கள் ஏதும் அடையாமல் இருந்தால் அவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையை தவிர்த்து மற்ற அனைத்து சாதனைகளையும் முறியடித்து விடுவார் என்று கருதுகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் பிராட்மேன் வைத்துள்ள சராசரியை (99.94) அவரால் எட்ட முடியாது’ என்றார். 29 வயதான விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 73 டெஸ்டில் ஆடி 24 சதங்கள் உள்பட 6,331 ரன்களும் (சராசரி 54.57), 216 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 38 சதங்கள் உள்பட 10,232 ரன்களும் (சராசரி 59.53) குவித்துள்ளார்.


சூப்பர் பார்மில் உள்ள விராட் கோலி மூன்று வடிவிலான போட்டிகளையும் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) சேர்த்து கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மட்டும் 7,824 ரன்கள் குவித்து, இந்த காலக்கட்டத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரராக திகழ்கிறார். அடுத்த இடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (6,371 ரன்) உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவிடம் ரூ.447 கோடி இழப்பீடு கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை நிராகரித்தது, ஐ.சி.சி.
இரு தரப்பு போட்டி தொடரில் விளையாட மறுத்ததற்காக இந்தியா ரூ.447 கோடி இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விடுத்த வேண்டுகோளை ஐ.சி.சி. நிராகரித்தது.
2. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி 2–வது வெற்றி பாகிஸ்தானை வீழ்த்தியது
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2–வது வெற்றியை பெற்றது.
3. தலையை தாக்கிய பவுன்சரால் நிலைகுலைந்த இமாம் உல் ஹக்
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், பேட்டிங் செய்யும் போது பவுன்சர் பந்து தாக்கியதில், பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் காயம் அடைந்தார்.
4. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை அணி படுதோல்வி ஏமாற்றத்துடன் விடைபெற்றார், ஹெராத்
காலேயில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
5. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை அணிக்கு 462 ரன்கள் இலக்கு
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 462 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.