கிரிக்கெட்

விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ! + "||" + Pakistan's Babar Azam Breaks Virat Kohli's Record, Becomes Fastest To 1,000 T20I Runs

விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் !

விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் !
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முறியடித்துள்ளார்.
கராச்சி, 

ரன் மெஷின் என்று வர்ணிக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது அசாத்திய பேட்டிங்க் திறமையால் கிரிக்கெட் அரங்கில், பல வியக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். அந்த வகையில், 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் 27 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருந்தார். 

விராட் கோலியின் மேற்கூறிய சாதனையை பாகிஸ்தானின் இளம் வீரர் பாபர் அசாம் முறியடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 58 பந்துகளில் 79 ரன்களை பாபர் அசாம் அடித்தார். இவர் 48 ரன்களை எட்டிய போது, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆயிரம் ரன்களை கடந்தார். 26 இன்னிங்ஸ்களில் பாபர் அசாம் இந்த மைல் கல்லை எட்டினார். 

நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் பாகிஸ்தான் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்துக்கு எதிரான  3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பாகிஸ்தான் அணி, 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

ஆசிரியரின் தேர்வுகள்...