கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் : 5 ஆண்டுகளில் முதல் வெற்றியை பதிவு செய்தது ஜிம்பாப்வே + "||" + Zimbabwe Beat Bangladesh By 151 Runs For 1st Test Win In 5 Years

டெஸ்ட் கிரிக்கெட் : 5 ஆண்டுகளில் முதல் வெற்றியை பதிவு செய்தது ஜிம்பாப்வே

டெஸ்ட் கிரிக்கெட் : 5 ஆண்டுகளில் முதல் வெற்றியை பதிவு செய்தது ஜிம்பாப்வே
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 5 ஆண்டுகளில் முதல் வெற்றியை ஜிம்பாப்வே அணி பதிவு செய்துள்ளது.
சில்கெட்,

ஜிம்பாப்வே அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கான ஒருநாள் தொடரை வங்காளதேச அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கடந்த 3 ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  இதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, முதல் இன்னிங்சில் 117.3 ஓவர்களில் 282 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 
 
இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவங்கிய வங்காளதேச அணி, ஜிம்பாப்வே அணியில் அபார பந்து வீச்சால் 143 ரன்களுக்குள் சுருண்டது. பின்னர் 139 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய ஜிம்பாப்வே அணி 65.4 ஓவர்களில் 181 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. இதன்படி, 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்காளதேச அணி, துவக்கத்தில் இருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை தாரை வார்த்தது. 

 துவக்க ஆட்டக்காரர் இம்ருல் கைஸ் அதிகபட்சமாக 43 ரன்கள் சேர்த்தார். ஏனைய பேட்ஸ்மேன்கள் அனைவரும் அடுத்தடுத்து பெவிலியன் நோக்கி நடையை கட்டினர். 63.1 ஓவர்கள் தாக்கு பிடித்த வங்காளதேச அணி 169 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன்மூலம் 151 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றியைப்பதிவு செய்தது. 

கடந்த 5 ஆண்டுகளில் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் பதிவு செய்யும் முதல் வெற்றி இதுவாகும். கடைசியாக, கடந்த 2013-ஆம் ஆண்டு ஹராரே நகரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்று இருந்தது. அதேபோல், கடந்த 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு அந்நிய மண்ணில், ஜிம்பாப்வே அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப்பட்டியலில், ஜிம்பாப்வே அணி 10-வது இடத்திலும், வங்காளதேச அணி 9-வது இடத்திலும் உள்ளன.

ஆசிரியரின் தேர்வுகள்...