வித்தியாசமான பந்து வீச்சுக்கு நடுவர் தடை விதித்ததால் பரபரப்பு


வித்தியாசமான பந்து வீச்சுக்கு நடுவர் தடை விதித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Nov 2018 9:30 PM GMT (Updated: 8 Nov 2018 8:28 PM GMT)

சி.கே.நாயுடு கோப்பைக்கான உள்ளூர் கிரிக்கெட் தொடரில் (23 வயதுக்குட்பட்டோர்) பெங்கால்–உத்தரபிரதேச அணிகள் இடையிலான ஆட்டத்தின் போது, ஷிவா சிங் என்ற பந்து வீச்சாளர் வித்தியாசமான முறையில் பந்து வீசினார்.

கொல்கத்தா,

சி.கே.நாயுடு கோப்பைக்கான உள்ளூர் கிரிக்கெட் தொடரில் (23 வயதுக்குட்பட்டோர்) பெங்கால்–உத்தரபிரதேச அணிகள் இடையிலான ஆட்டத்தின் போது, ஷிவா சிங் என்ற பந்து வீச்சாளர் வித்தியாசமான முறையில் பந்து வீசினார். உத்தரபிரதேச இடக்கை சுழற்பந்து வீச்சாளரான ஷிவா சிங், கிரீசுக்குள் ஓடி வருகையில், திடீரென ஒரு முறை தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பந்தை வீசினார். இதை கவனித்த நடுவர் அந்த பந்து செல்லாது (டெட்–பால்) என்று அறிவித்து மீண்டும் வீச சொன்னார். ‘360 டிகிரி கோணத்தில் தான் சுழன்று திரும்புவது இது முதல்முறையல்ல, ஏற்கனவே கடந்த மாதம் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் கேரளாவுக்கு எதிராக இவ்வாறு பந்து வீசிய போது நடுவர் ஆட்சேபிக்கவில்லை. பேட்ஸ்மேன்கள் ரிவர்ஸ் ஸ்வீங், சுவிட்ச் ஹிட் வகையில் புதுமையான ஷாட்டுகளை அடிக்கும் போது, பவுலர்கள் ஏதாவது வித்தியாசமாக செய்தால் அதற்கு அனுமதி மறுப்பதா?’ என்று ஷிவா சிங் கேள்வி எழுப்பியுள்ளார். கிரிக்கெட் சட்ட விதிகளின்படி, பேட்ஸ்மேன்களின் கவனம் சிதறும் வகையிலோ அல்லது இடையூறு செய்யும் வகையிலேயே பந்து வீசினால் அந்த பந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. ஷிவா சிங்கின் பந்து வீச்சு காட்சி இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.


Next Story