கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு + "||" + Against India 20 Over cricket: Australian team announcement

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுடன் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

சிட்னி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுடன் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஒரு நாள் போட்டியில் படுதோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, 2–வது ஒரு நாள் போட்டியில் இன்று களம் இறங்குகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் ஆஸ்திரேலிய அணி தென்ஆப்பிரிக்காவுடன் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் (17–ந்தேதி) ஆடுகிறது. அதன் பிறகு இந்தியாவுடன் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா–ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி பிரிஸ்பேனில் வருகிற 21–ந்தேதி நடக்கிறது.

இவ்விரு 20 ஓவர் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், பீட்டர் சிடில், மிட்செல் மார்ஷ் இடம் பெறவில்லை. இந்திய டெஸ்ட் தொடரை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதாக பயிற்சியாளர் லாங்கர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய 20 ஓவர் போட்டி அணி வருமாறு:– ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), அலெக்ஸ் காரி, ஆஷ்டன் அகர், ஜாசன் பெரென்டோர்ப், நாதன் கவுல்டர்–நிலே, கிறிஸ் லின், மேக்ஸ்வெல், பென் மெக்டெர்மோட், டார்சி ஷார்ட், பில்லி ஸ்டான்லேக், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆண்ட்ரூ டை, ஆடம் ஜம்பா.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
2. ரஞ்சி கிரிக்கெட்: டெல்லியை வெளியேற்றியது பெங்கால்
ரஞ்சி கிரிக்கெட் தொடரில் பெங்கால் – டெல்லி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) கொல்கத்தா ஈடன்கார்டனில் கடந்த 30–ந்தேதி தொடங்கியது.
3. அடுத்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: சூப்பர்–12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது, இலங்கை
அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேரடியாக சூப்பர்–12 சுற்றில் அடியெடுத்து வைக்கும் வாய்ப்பை இலங்கை, வங்காளதேசம் அணிகள் இழந்துள்ளன.
4. ரஞ்சி கிரிக்கெட்: மும்பை அணி வெளியேற்றம்
ரஞ்சி கிரிக்கெட்டில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சிறப்புக்குரிய மும்பை அணி இந்த சீசனில் லீக் சுற்றுடன் வெளியேறியது.
5. தமிழகத்திற்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: இமாச்சலபிரதேச அணி 340 ரன்கள் குவிப்பு
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்திற்கு எதிரான ஆட்டத்தில் இமாச்சலபிரதேச அணி 340 ரன்கள் குவித்துள்ளது.