கிரிக்கெட்

தலையை தாக்கிய பவுன்சரால் நிலைகுலைந்த இமாம் உல் ஹக் + "||" + Massive Injury Scare For Pakistan Batsman After Being Hit By Ferocious Bouncer

தலையை தாக்கிய பவுன்சரால் நிலைகுலைந்த இமாம் உல் ஹக்

தலையை தாக்கிய பவுன்சரால் நிலைகுலைந்த  இமாம் உல் ஹக்
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், பேட்டிங் செய்யும் போது பவுன்சர் பந்து தாக்கியதில், பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் காயம் அடைந்தார்.
அபுதாபி,

ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹூக்ஸ், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூர் போட்டியின் போது, பவுன்சர் பந்து பின் கழுத்து பகுதியில் தாக்கியதால், நிலைகுலைந்து உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு பிறகு, கிரிக்கெட் மைதானத்தில் பவுன்சர் பந்து எந்த பேட்ஸ்மேனையும் தாக்கினால், ஒரு நிமிடம் மைதானமே அதிர்ச்சியில் ஆழ்ந்து விடுகிறது. 

அதுபோன்ற ஒரு சம்பவம் தான், நேற்று அபுதாபியில் நடைபெற்ற நியூசிலாந்து - பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது நடைபெற்றது. பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் இமாம் உல் ஹக் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது, நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்கசன் வீசிய பவுன்சர் பந்தை, எதிர்கொண்டார். ஆனால் துரதிருஷ்டவசமாக பந்து அவரது தலையை தாக்கியது. ஹெல்மெட் அணிந்து இருந்த போதும், பந்து மோதிய வேகத்தில் நிலைகுலைந்த இமாம் உல் ஹக் வலியால் துடித்தார். மைதானத்தில் சில வினாடிகள் படுத்த இமாம் உல் ஹக், பின்னர் எழுந்து நின்றார்.

உடனடியாக பாகிஸ்தான் அணியின் மருத்துவர்கள் மைதானத்துக்கு வந்து அழைத்துச்சென்றனர். ஸ்கேன் செய்யப்பட்டதில், அவருக்கு பெரிய அளவில் எந்த காயமும் இல்லை என்று தெரியவந்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

ஆசிரியரின் தேர்வுகள்...