கிரிக்கெட்

இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல் + "||" + India-Pakistan Confrontation Today

இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்

இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், புரோவிடென்சில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை சந்திக்கிறது.
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், புரோவிடென்சில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை சந்திக்கிறது. இந்திய அணி தொடக்க லீக் ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் பலம் வாய்ந்த நியூசிலாந்தை பதம் பார்த்தது. இதில், 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் விளாசிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்த இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 51 பந்துகளில் 103 ரன்கள் நொறுக்கினார். அதே வேகத்துடன் பாகிஸ்தானையும் போட்டுத்தாக்க இந்திய வீராங்கனைகள் ஆயத்தமாக உள்ளனர். தனது முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் மண்ணை கவ்விய பாகிஸ்தான் அணி, வெற்றிக்கணக்கை தொடங்க முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், ‘தொடக்க ஆட்டத்தில் ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து விட்டோம். ‘பவர்-பிளே’யில், குறிப்பிட்ட பீல்டிங் வட்டத்திற்கு வெளியே 2 பேர் மட்டுமே நிற்பார்கள். இதை பயன்படுத்தி வேகமாக ரன்கள் எடுக்க முடியும். இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்’ என்றார்.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இதுவரை 20 ஓவர் போட்டிகளில் 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 8-ல் இந்தியாவும், 2-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.

ஆசிரியரின் தேர்வுகள்...