விதிமுறைக்கு புறம்பான பந்துவீச்சு: இலங்கை பவுலர் தனஞ்ஜெயாவுக்கு சிக்கல்


விதிமுறைக்கு புறம்பான பந்துவீச்சு: இலங்கை பவுலர் தனஞ்ஜெயாவுக்கு சிக்கல்
x
தினத்தந்தி 11 Nov 2018 9:30 PM GMT (Updated: 11 Nov 2018 8:27 PM GMT)

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயாவின் பந்து வீச்சு விதிமுறைக்கு மாறாக சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்ததாக கள நடுவர்கள் புகார் அளித்துள்ளனர்.

துபாய், 

காலேயில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டின் போது இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயாவின் பந்து வீச்சு விதிமுறைக்கு மாறாக சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்ததாக கள நடுவர்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அடுத்த 14 நாட்களுக்குள் அவர் தனது பந்துவீச்சு முறையை சோதனைக்குட்படுத்தும்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. சோதனை முடிவு வெளியாகும் வரை அவர் தொடர்ந்து பந்து வீச அனுமதிக்கப்படும்.

இதற்கிடையே இடுப்பு பகுதியில் காயத்தால் அவதிப்படும் இலங்கை கேப்டன் சன்டிமால், 14–ந்தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான 2–வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சுரங்கா லக்மல் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story