கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில், ஐதராபாத் அணி 249 ரன்கள் சேர்ப்பு + "||" + In the Ranji Trophy match against Hyderabad, Hyderabad team added 249 runs

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில், ஐதராபாத் அணி 249 ரன்கள் சேர்ப்பு

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில், ஐதராபாத் அணி 249 ரன்கள் சேர்ப்பு
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில், ஐதராபாத் அணி 249 ரன்கள் சேர்த்தது.
நெல்லை,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் தமிழ்நாடு-ஐதராபாத் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் நெல்லையில் நேற்று தொடங்கியது.

முதலில் ஆடிய ஐதராபாத் அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது. கேப்டன் அக்‌ஷாத் ரெட்டி 243 பந்துகளில் 14 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 114 ரன்னும், பவனகா சந்தீப் 133 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 74 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

தமிழக அணி தரப்பில் கே.விக்னேஷ், முகமது, ரஹில் ஷா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.