கிரிக்கெட்

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: ஜிம்பாப்வே 304 ரன்னில் ஆல்-அவுட் + "||" + Test against Bangladesh: Zimbabwe all-out in 304 runs

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: ஜிம்பாப்வே 304 ரன்னில் ஆல்-அவுட்

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: ஜிம்பாப்வே 304 ரன்னில் ஆல்-அவுட்
வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஜிம்பாப்வே 304 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
டாக்கா,

ஜிம்பாப்வே - வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 522 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. முஷ்பிகுர் ரஹிம் (219 ரன்) இரட்டை சதம் அடித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 25 ரன் எடுத்திருந்தது. இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 131 ரன்களுடன் தத்தளித்தது. அதன் பிறகு பிரன்டன் டெய்லர் (110 ரன்), பீட்டர் மூர் (83 ரன்) ஆகியோர் அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்ட போதிலும் ‘பாலோ-ஆன்’ ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியவில்லை.


ஆட்ட நேரம் முடியும் தருணத்தில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 105.3 ஓவர்களில் 304 ரன்னில் ‘ஆல்-அவுட்‘ ஆனது. காயம் காரணமாக சதரா பேட் செய்ய வரவில்லை. வங்காளதேச இடக்கை சுழற்பந்து வீச்சாளர் தைஜூல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். ‘பாலோ-ஆனை’ தவிர்க்க மேலும் 19 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜிம்பாப்வே ஆட்டம் இழந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது. ஜிம்பாப்வே அணிக்கு, வங்காளதேச அணி ‘பாலோ-ஆன்’ கொடுக்குமா? என்பது இன்று காலை தான் தெரியும்.


தொடர்புடைய செய்திகள்

1. வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு
வங்காளதேசத்தில் ஏற்பட்ட பயங்கர் தீ விபத்தில், 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் ஆனது. இந்த கோர விபத்தால் 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
2. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 250 ரன்னில் ‘ஆல்-அவுட்’
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 250 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. ஸ்டீவன் சுமித்தை ‘பவுன்சர்’ பந்து தாக்கி கீழே சரிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
3. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா? - கடைசி ஆட்டம் இன்று நடக்கிறது
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ள இந்திய அணி இன்று கடைசி ஒரு நாள் போட்டியில் களம் இறங்குகிறது.
4. இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் 3 புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் தென்ஆப்பிரிக்க அணியில் 3 புதுமுக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
5. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ‘எனது பந்து வீச்சு மகிழ்ச்சி அளிக்கிறது’ - குருணல் பாண்ட்யா
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில், தனது பந்து வீச்சு மகிழ்ச்சி அளிப்பதாக குருணல் பாண்ட்யா கூறினார்.