கிரிக்கெட்

அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய ‘ஏ’ அணியில் 4 வீரர்கள் அரைசதம் + "||" + Unofficial Test cricket: India 'A' team has four players in half

அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய ‘ஏ’ அணியில் 4 வீரர்கள் அரைசதம்

அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய ‘ஏ’ அணியில் 4 வீரர்கள் அரைசதம்
அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய ‘ஏ’ அணியில் 4 வீரர்கள் அரைசதம் அடித்தனர்.
மவுன்ட் மாங்கானு,

இந்திய ‘ஏ’ கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு ‘ஏ’ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற முதலாவது டெஸ்ட் போட்டி (4 நாள் ஆட்டம்) மவுன்ட் மாங்கானுவில் நேற்று தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய ‘ஏ’ அணி தொடக்க நாளில் 89.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் குவித்தது. பிரித்வி ஷா (62 ரன்), மயங்க் அகர்வால் (65 ரன்), ஹனுமா விஹாரி (86 ரன்), விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேல் (79 ரன், நாட்-அவுட்) ஆகியோர் அரைசதம் அடித்தனர். முரளிவிஜய் 28 ரன்னிலும், கேப்டன் ரஹானே 12 ரன்னிலும் வீழ்ந்தனர். 2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது