கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி 227 ரன்னில் ‘ஆல்-அவுட்’ + "||" + Test cricket against New Zealand: Pakistan team 227 runs 'all-out'

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி 227 ரன்னில் ‘ஆல்-அவுட்’

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி 227 ரன்னில் ‘ஆல்-அவுட்’
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 227 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.
அபுதாபி,

பாகிஸ்தான்-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 153 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் கனே வில்லியம்சன் 63 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ‘அவுட்’ ஆனார்கள். பாகிஸ்தான் அணி தரப்பில் யாசிர் ஷா 3 விக்கெட்டுகளும், முகமது அப்பாஸ், ஹசன் அலி, ஹாரிஸ் சோகைல் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.


பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்து இருந்தது. அசார் அலி 10 ரன்னுடனும், ஹாரிஸ் சோகைல் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன.

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 83.2 ஓவர்களில் 227 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. சற்று தாக்குப்பிடித்து ஆடிய பாபர் அசாம் 62 ரன்னும், ஆசாத் ஷபிக் 43 ரன்னும், ஹாரிஸ் சோகைல் 38 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் விரைவில் பெவிலியன் திரும்பினார்கள். நியூசிலாந்து அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டும், கிரான்ட்ஹோம், அஜாஸ் பட்டேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

74 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் ரன் எதுவும் எடுக்காமல் ஹசன் அலி பந்து வீச்சில் போல்டு ஆனார். நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 22.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்து இருந்த போது போதிய வெளிச்சம் இல்லாததால் நேற்றைய ஆட்டம் கைவிடப்பட்டது. அப்போது ஜீத் ராவல் 26 ரன்னுடனும், கேப்டன் கனே வில்லியம்சன் 27 ரன்னுடனும் இருந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 250 ரன்னில் ‘ஆல்-அவுட்’
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 250 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. ஸ்டீவன் சுமித்தை ‘பவுன்சர்’ பந்து தாக்கி கீழே சரிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
3. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 268 ரன்கள் இலக்கு: வெற்றியை நோக்கி இலங்கை அணி
காலே டெஸ்டில் நியூசிலாந்து நிர்ணயித்த 268 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடும் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 133 ரன்கள் சேர்த்து வெற்றியை நோக்கி பயணிக்கிறது.
4. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி 267 ரன்னில் ‘ஆல்-அவுட்’
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 267 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
5. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா? - கடைசி ஆட்டம் இன்று நடக்கிறது
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ள இந்திய அணி இன்று கடைசி ஒரு நாள் போட்டியில் களம் இறங்குகிறது.