கிரிக்கெட்

கிரிக்கெட்: அயர்லாந்து இரட்டை சகோதரிகள் ஓய்வு + "||" + Cricket: Ireland Twin sisters Leisure

கிரிக்கெட்: அயர்லாந்து இரட்டை சகோதரிகள் ஓய்வு

கிரிக்கெட்: அயர்லாந்து இரட்டை சகோதரிகள் ஓய்வு
அயர்லாந்து கிரிக்கெட் அணியின் இரட்டை சகோதரிகள் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ‘பி’ பிரிவில் நடந்த கடைசி லீக்கில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை துவம்சம் செய்த திருப்தியுடன் வெளியேறியது. இதில் முதலில் பேட் செய்த அயர்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 79 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த எளிய இலக்கை நியூசிலாந்து அணி 7.3 ஓவர்களில் எட்டியது. இந்த ஆட்டத்துடன் அயர்லாந்து இரட்டை சகோதரிகள் 35 வயதான சிசிலியா ஜாய்ஸ், இசோபெல் ஜாய்ஸ் இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

தனது கடைசி ஆட்டத்தில் ஒரு ரன்னில் கேட்ச் ஆன சிசிலியா மொத்தத்தில் 43 இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடி 659 ரன்கள் எடுத்துள்ளார். இதே போல் ரன் ஏதுமின்றி வீழ்ந்த இசோபெல் 55 ஆட்டங்களில் ஆடி 944 ரன்கள் சேர்த்து இருக்கிறார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை கடந்த ஒரே அயர்லாந்து வீராங்கனையான 37 வயதான கிளார் ஷில்லிங்டன், சுழற்பந்து வீச்சாளர் 39 வயதான சியாரா மெட்கால்ப் ஆகியோரும் இதுவே தங்களது கடைசி சர்வதேச போட்டி என்று ஏற்கனவே கூறியிருந்தது நினைவு கூரத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. டி.என்.பி.எல். கிரிக்கெட்: காரைக்குடி–கோவை அணிகள் இன்று மோதல் சென்னையில் நடக்கிறது
4–வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இந்த சீசனில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி உள்பட இரண்டு ஆட்டங்கள் மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2. டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? காஞ்சி வீரன்சுடன் இன்று மோதல்
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்துடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இன்று காஞ்சி வீரன்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
3. உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ‘ஓவர்துரோ’ மூலம் வந்த பவுண்டரியை வேண்டாம் என்று சொல்லவில்லை பென் ஸ்டோக்ஸ் மறுப்பு
இங்கிலாந்தில் கடந்த மாதம் நடந்த 12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து–நியூசிலாந்து அணிகள் மோதின.
4. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெற்றார் வேணுகோபால் ராவ்
இந்திய கிரிக்கெட் வீரர் வேணுகோபால் ராவ் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
5. அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி 85 ரன்னில் சுருண்டது
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 85 ரன்னில் சுருண்டது.