கிரிக்கெட்

ஸ்மித், வார்னர் மீதான தடை தொடரும்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் + "||" + Smith, Warner bans to stand: Cricket Australia

ஸ்மித், வார்னர் மீதான தடை தொடரும்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம்

ஸ்மித், வார்னர் மீதான தடை தொடரும்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம்
ஸ்மித், வார்னர் மீதான தடை தொடரும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
பிரிஸ்பேன்,

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற  டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித், பான்கிராட் வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஸ்மித், வார்னருக்கு ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாட தடையும் பான்கிராப்டுக்கு 9 மாதம் தடையும் விதிக்கப்பட்டது. 

இந்த நிலையில், சமீப காலமாக ஆஸ்திரேலிய அணியின் செயல்பாடுகள் மோசமாக இருந்து வரும் நிலையில், முன்னணி வீரர்களான ஸ்மித், வார்னருக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கமும், இவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது. 

மேலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் தங்கள் கோரிக்கைகளையும் தாக்கல் செய்தது. ஆனால், ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் மீதான தடை தொடரும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய இடைக்கால தலைவர் எர்ல் எட்டிங்ஸ் உறுதிபட தெரிவித்துள்ளார். இதன் மூலம், இந்தியாவுக்கு எதிரான தொடரில் வார்னர், ஸ்மித் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஹசிம் அம்லா அறிவிப்பு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா அறிவித்துள்ளார்.
2. உலக கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பந்துவீச்சு
உலக கோப்பை கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பந்துவீசுகிறது.
3. தென் ஆப்பிரிக்க வீரர் நிகிடி காயம்: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டர் என தகவல்
காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க வீரர் நிகிடி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. ஐபிஎல் தொடரின் கடைசி சில போட்டிகளில் வார்னர், ஸ்மித் விளையாடும் வாய்ப்பு குறைவு
ஐபிஎல் தொடரின் கடைசி சில போட்டிகளில் வார்னர், ஸ்மித் விளையாட மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.