கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை கடந்து ஜாபர் சாதனை + "||" + Ranji Cricket Passing 11 thousand runs Jabber record

ரஞ்சி கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை கடந்து ஜாபர் சாதனை

ரஞ்சி கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை கடந்து ஜாபர் சாதனை
ரஞ்சி கிரிக்கெட் தொடரில், நாக்பூரில் நடந்து வரும் பரோடாவுக்கு (ஏ பிரிவு) எதிரான லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான விதர்பா அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 529 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.

நாக்பூர், 

ரஞ்சி கிரிக்கெட் தொடரில், நாக்பூரில் நடந்து வரும் பரோடாவுக்கு (ஏ பிரிவு) எதிரான லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான விதர்பா அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 529 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. கேப்டன் பெய்ஸ் பாசல் (151 ரன்), வாசிம் ஜாபர் (153 ரன்), விக்கெட் கீப்பர் அக்‌ஷய் வாட்கர் (102 ரன்) சதம் அடித்தனர். இதில் 40 வயதான ஜாபர் 97 ரன்கள் எடுத்த போது, ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் 11 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.