கிரிக்கெட்

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா? அரைஇறுதியில் நாளை இங்கிலாந்துடன் மோதல் + "||" + Will the Indian team reach the final? Semi-final collision with England tomorrow

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா? அரைஇறுதியில் நாளை இங்கிலாந்துடன் மோதல்

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா? அரைஇறுதியில் நாளை இங்கிலாந்துடன் மோதல்
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை நடைபெறும் 2–வது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா–இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

ஆன்டிகுவா, 

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை நடைபெறும் 2–வது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா–இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

அரைஇறுதியில் இந்தியா–இங்கிலாந்து மோதல்

6–வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

இந்திய நேரப்படி நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு ஆன்டிகுவாவில் நடைபெறும் 2–வது அரைஇறுதிப்போட்டியில் இந்தியா–இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

ஹர்மன்பிரீத் கவுர்

இந்திய அணி லீக் ஆட்டங்களில் நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து, ஆஸ்திரேலியா அணிகளை வீழ்த்தி தனது பிரிவில் (பி) முதலிடத்தை பிடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. அத்துடன் இந்த போட்டி தொடரில் இந்திய அணி தான் அதிகபட்ச ஸ்கோரை (நியூசிலாந்துக்கு எதிராக 194/5) குவித்துள்ளது.

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (167 ரன்கள்) ரன் குவிப்பில் முதலிடத்தில் உள்ளார். மந்தனா (144 ரன்கள்), சீனியர் வீராங்கனை மிதாலி ராஜ் (107 ரன்கள்) ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளனர். கடைசி லீக் ஆட்டத்தில் காயம் காரணமாக களம் இறங்காத மிதாலி ராஜ் இந்த ஆட்டத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் பூனம் யாதவ் (8 விக்கெட்), ராதா யாதவ் (7 விக்கெட்), ஹேமலதா (5 விக்கெட்), தீப்தி சர்மா (4 விக்கெட்) ஆகியோர் எதிரணியினருக்கு சவாலாக விளங்கி வருகிறார்கள்.

பேட்டிங் சொதப்பல்

இங்கிலாந்து அணி லீக் ஆட்டங்களில் வங்காளதேசம், தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. வெஸ்ட்இண்டீசிடம் தோல்வி கண்டது. ஒரு ஆட்டம் (இலங்கைக்கு எதிராக) முடிவில்லாமல் போனது. ‘ஏ’ பிரிவில் 2–வது இடத்தை பிடித்து இங்கிலாந்து அணி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.

ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பேட்டிங் பாராட்டும் வகையில் இல்லை. அந்த அணி இந்த போட்டி தொடரில் அதிகபட்சமாக 115 ரன்கள் (வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக) தான் எடுத்துள்ளது. எந்தவொரு வீராங்கனையும் 50 ரன்களை தாண்டவில்லை. ஆனால் அந்த அணியின் பந்து வீச்சு மிரட்டும் வகையில் உள்ளது. அன்யா சிருப்சோல் (7 விக்கெட்), கிறிஸ்டி கோர்டான் (6 விக்கெட்), நாதலி ஸ்வியர் (4 விக்கெட்) ஆகியோர் பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டு எதிரணியை கட்டுப்படுத்தி வருகிறார்கள்.

இந்தியா பதிலடி கொடுக்குமா?

கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி முயற்சிக்கும். இங்கிலாந்து அணி தனது ஆதிக்கத்தை தொடர போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இரு அணிகளும் இதுவரை 20 ஓவர் போட்டியில் 13 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்திய அணி 3 முறையும், இங்கிலாந்து அணி 10 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

வெஸ்ட்இண்டீஸ்–ஆஸ்திரேலியா

முன்னதாக இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு ஆன்டிகுவாவில் நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ் அணி, 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பையை வென்ற கதை: கிரிக்கெட் படத்தில் உதவி இயக்குனராக கபில்தேவ் மகள்
உலக கோப்பையை வென்ற கிரிக்கெட் படத்தில், உதவி இயக்குனராக கபில்தேவ் மகள் பணியாற்றுகிறார்.
2. துளிகள்
இங்கிலாந்தில் தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக ஆடம் கிரிப்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
3. உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட வேண்டுமா? -கம்பீர் பதில்
உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட வேண்டுமா? என்ற கேள்விக்கு கவுதம் கம்பீர் பதிலளித்துள்ளார்.
4. லண்டனில் இந்திய ஆதரவு பேரணியில் கைகலப்பு
இங்கிலாந்தில் உள்ள இந்தியத் தூதரகம் எதிரே காஷ்மீர் மற்றும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கும், இந்திய ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...