கிரிக்கெட்

10 ஓவர் போட்டி : 16 பந்தில் 74 ரன்கள் அடித்து முகமது சேஷாத் சாதனை + "||" + Mohammad Shahzad Lights Up T-10 League with 16-ball 74* as Rajputs Chase 95 in 4 Overs

10 ஓவர் போட்டி : 16 பந்தில் 74 ரன்கள் அடித்து முகமது சேஷாத் சாதனை

10 ஓவர் போட்டி : 16 பந்தில் 74 ரன்கள் அடித்து முகமது சேஷாத் சாதனை
10 ஓவர் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது சேஷாத் அதிரடியாக ரன்கள் விளாசி சாதனை படைத்தார்.
துபாய்,

10 ஓவர்  தொடர் கடந்த ஆண்டு முதல் துபாயில் நடந்து வருகிறது. எட்டு அணிகள் பங்கு பெறும் இந்த தொடரில் பல்வேறு நாட்டு முன்னணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர். இந்த ஆண்டுக்கான தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று தொடங்கியது. டிசம்பர் 2 ஆம் தேதி வரை இந்த தொடர் நடக்கிறது.

நேற்று நடந்த லீக் போட்டியில் ஷேன் வாட்சன் தலைமையிலான சிந்திஸ் அணியும், பிரெண்டன் மெக்குலம் தலைமையிலான ராஜ்புத்ஸ் அணியும் மோதின.

முதலில் ஆடிய சிந்திஸ் அணி 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்தது. வாட்சன் 42 ரன் குவித்தார். இதையடுத்து ராஜ்புத்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மெக்குலமும், முகமது சேஷாத்தும் (ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் ) களமிறங்கினார். யாரும் எதிர்பார்க்காத வகையில் சேஷாத், பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து வானவேடிக்கை காட்டினார். பவுண்டரி, சிக்சர் என தொடர்ந்து அவர் வெளுத்து வாங்கினார்.

இதனால் வெறும் 16 பந்துகளில் அவர் 74 ரன்களை குவித்தார். இதில் எட்டு சிக்சர்களும் நான்கு பவுண்டரிகளும் அடங்கும். 12 ரன்களில் அரைச் சதம் அடித்து சாதனைப் படைத்தார். இவரது அபார ஆட்டத்தால் ராஜ்புத்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அபாரமாக பேட்டிங் செய்த சேஷாத்திடம் பிட்னஸ் குறித்து கேட்டபோது, நான் உடலைக் குறைக்க அதிகமாக பயிற்சி எடுத்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் உணவு விஷயத்தில் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை.

இந்திய வீரர் விராத் கோலி மாதிரி தினமும் பிட்னஸ் பயிற்சி எடுக்கச் சொன்னால் என்னால் முடியாது. ஆனால், முயற்சி செய்கிறேன். விராட் போல சிக்சர் அடிப்பது பற்றி கேட்கிறார்கள். விராட் கோலியை விட எவ்வளவு தூரமாக சிக்சர் அடிக்க வேண்டுமோ, அவ்வளவு தூரமாக என்னால் அடிக்க முடியும். அதனால், அவரை போல் டயட் கடைபிடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய வீரர் பும்ரா சாதனை!
குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் பும்ரா!
2. இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தாக்குதல் அச்சுறுத்தல் இ-மெயிலால் பரபரப்பு ; பாதுகாப்பு அதிகரிப்பு
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக மேற்கிந்திய தீவுகளில் உள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
3. ஆடை இல்லா விக்கெட் கீப்பிங் : பிரபல கிரிக்கெட் வீராங்கனை வெளியிட்ட புகைப்படம்
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்டின் பிரபல வீராங்கனை சாரா டெய்லர் வெளியிட்ட ஆடை இல்லா புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
4. கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக விளையாடிய முழுநேர மாற்று வீரர்!
கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக போட்டியின் நடுவே இடம்பிடித்த முழுநேர மாற்று வீரர்!
5. முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலைக்கு காரணம் என்ன? - பரபரப்பு தகவல்கள்
கடன் பிரச்சினையால் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.