கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் 2 புதுமுக வீரர்கள் + "||" + Test cricket against India: In the Australian team 2 newcomers

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் 2 புதுமுக வீரர்கள்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் 2 புதுமுக வீரர்கள்
இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் 2 புதுமுக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

சிட்னி, 

இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் 2 புதுமுக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

முதல் 2 டெஸ்ட்

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் போட்டி தொடர் முடிந்ததும், 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்கிறது. இதில் இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 6–ந் தேதியும், 2–வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் டிசம்பர் 14–ந் தேதியும் தொடங்குகிறது.

இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விக்டோரியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்கஸ் ஹாரிஸ் புதுமுக வீரராக அணியில் இடம் பெற்றுள்ளார். 26 வயதான மார்கஸ் ஹாரிஸ் உள்ளூர் முதல் தர போட்டியில் தொடர்ச்சியாக ரன் குவித்து வருவதாலும், நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டம் இழக்காமல் 250 ரன்கள் சேர்த்ததாலும் அவருக்கு அணியில் அதிர்ஷ்டம் அடித்து இருக்கிறது. அவர் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.

புதுமுக வீரர் கிறிஸ் டிரிமெய்ன்

இதேபோல் விக்டோரியா அணிக்காக விளையாடி வரும் 27 வயது வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் டிரிமெய்ன் புதுமுக வீரராக அணியில் இடம் பிடித்துள்ளார். உள்ளூர் முதல் தர போட்டியில் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வருவதாலும், இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் 2–வது இடத்தை பிடித்ததாலும் அவருக்கு அணியில் இடம் கிடைத்து இருக்கிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் காயம் அடைந்து கடந்த மாதத்தில் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து உடல் தகுதியில் முன்னேற்றம் கண்டு வரும் உஸ்மான் கவாஜா அணியில் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். தொடக்க ஆட்டக்காரர் ரென்ஷா மீண்டும் அணி தேர்வில் புறக்கணிக்கப்பட்டுள்ளார். ‘12 பேர் கொண்ட இறுதி அணி டெஸ்ட் போட்டிக்கு முந்தைய நாளில் அறிவிக்கப்படும் என்றும், அந்த அணியில் இடம் கிடைக்காத 2 வீரர்கள் உள்ளூர் முதல் தர போட்டியில் விளையாட அனுமதி அளிக்கப்படும்’ என்றும் தேர்வு குழு உறுப்பினர் டிரோவர் ஹான்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள்

இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி வீரர்கள் வருமாறு:–

கம்மின்ஸ், ஆரோன் பிஞ்ச், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஹாரிஸ், ஹேசில்வுட் (துணை கேப்டன்), டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, நாதன் லயன், மிட்செல் மார்ஷ் (துணை கேப்டன்), ஷான் மார்ஷ், டிம் பெய்ன் (கேப்டன்), பீட்டர் சிடில், மிட்செல் ஸ்டார்க், கிறிஸ் டிரிமெய்ன்.


தொடர்புடைய செய்திகள்

1. டி.என்.பி.எல். கிரிக்கெட்: காரைக்குடி–கோவை அணிகள் இன்று மோதல் சென்னையில் நடக்கிறது
4–வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இந்த சீசனில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி உள்பட இரண்டு ஆட்டங்கள் மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2. டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? காஞ்சி வீரன்சுடன் இன்று மோதல்
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்துடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இன்று காஞ்சி வீரன்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
3. உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ‘ஓவர்துரோ’ மூலம் வந்த பவுண்டரியை வேண்டாம் என்று சொல்லவில்லை பென் ஸ்டோக்ஸ் மறுப்பு
இங்கிலாந்தில் கடந்த மாதம் நடந்த 12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து–நியூசிலாந்து அணிகள் மோதின.
4. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெற்றார் வேணுகோபால் ராவ்
இந்திய கிரிக்கெட் வீரர் வேணுகோபால் ராவ் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
5. எம்.எஸ்.டோனி கிரிக்கெட்டில் இருந்து நிரந்தர ஓய்வு இல்லை - 2 மாதமே ஓய்வு தகவல்
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் எம்.எஸ்.டோனி கலந்து கொள்ளவில்லை, இப்போது ஓய்வும் பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.