வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் வங்காளதேச வீரர் மொமினுல் ஹக் சதம்


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் வங்காளதேச வீரர் மொமினுல் ஹக் சதம்
x
தினத்தந்தி 22 Nov 2018 10:15 PM GMT (Updated: 22 Nov 2018 8:46 PM GMT)

வங்காளதேசத்துக்கு சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.

சிட்டகாங், 

வங்காளதேசத்துக்கு சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் நேற்று தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த வங்காளதேச அணி மொமினுல் ஹக்கின் (120 ரன்) அபார சதத்தால் ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 222 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்தது. மொமினுல் ஹக் வெளியேறியதும் ஆட்டத்தின் போக்கு மாறியது. அடுத்த 37 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை தாரைவார்த்து அந்த அணி நெருக்கடிக்குள்ளானது. பிறகு 9–வது விக்கெட்டுக்கு நயீம் ஹசன் (24 ரன்), தைஜூல் இஸ்லாம் (32 ரன்) இருவரும் இணைந்து 300 ரன்களை கடக்க வைத்து கடைசி வரை களத்தில் நின்றனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் சேர்த்துள்ளது. 2–வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

27 வயதான மொமினுல் ஹக்குக்கு இது 8–வது சதமாகும். இதன் மூலம் டெஸ்டில் வங்காளதேச வீரர்களில் அதிக சதங்கள் அடித்தவரான தமிம் இக்பாலின் (8 சதம்) சாதனையை சமன் செய்தார்.


Next Story