கிரிக்கெட்

இனி நான் சந்தோசமாக இறப்பேன் ; ரஷித்கானுக்காக பெண் கிரிக்கெட் வீராங்கனை + "||" + Now I can die happy For rashitkhan -Female cricketer

இனி நான் சந்தோசமாக இறப்பேன் ; ரஷித்கானுக்காக பெண் கிரிக்கெட் வீராங்கனை

இனி நான் சந்தோசமாக இறப்பேன் ; ரஷித்கானுக்காக பெண் கிரிக்கெட் வீராங்கனை
இனி நான் சந்தோசமாக இறப்பேன் என்று ரஷித்கானுக்காக இங்கிலாந்து பெண் கிரிக்கெட் வீராங்கனை வெளியிட்ட தகவல்.
ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரசித்கான் தனக்கு மிகவும் பிடித்த பெண் கிரிக்கெட் வீரர் இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் என கூறியுள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் பலரிடையே மிகவும் பிரபலமான சுழற்பந்து வீச்சாளர் ரசித்கான், ஆப்கானிஸ்தானை சேர்ந்த வீரராக இருந்தாலும் ரசிகர்கள் பலருக்கு பிடித்தமான வீரராக இருந்து வருகிறார். இவர் தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் எந்த பதிவை வெளியிட்டாலும், ரசிகர்கள் அதனை வைரலாக்கி விடுகின்றனர்.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர், உங்களுக்கு பிடித்த பெண் கிரிக்கெட் வீரர் யார் என ரசித்கானிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.அதற்கு பதிலளித்திருந்த ரசித், இங்கிலாந்தின் முன்னாள் விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் என பதிலளித்திருந்தார். இதனை பார்த்த சாரா, 'நான் இப்பொழுது சந்தோசமாக இறப்பேன்' என தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். உடனே அதற்கு மீண்டும் பதிலளித்த ரசித், இறந்து விடாதீர்கள் என கூறியுள்ளார். இந்த பதிவானது தற்போது இணையம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பட்லரை ரன் அவுட் செய்த விவகாரம்: நான் விதிகளை மீறவில்லை - அஸ்வின் விளக்கம்
பட்லரை ரன் அவுட் செய்த விவகாரத்தில் நான் விதிகளை மீறவில்லை என அஸ்வின் விளக்கம் அளித்து உள்ளார்.
2. மேட்ச் பிக்ஸிங் நடந்திருக்குமோ என்று மக்கள் நினைத்து விட்டால் கிரிக்கெட் மீதான நம்பிக்கையை இழந்து விடுவார்கள் - டோனி
போட்டியில் மேட்ச் பிக்ஸிங் நடந்திருக்குமோ என்று மக்கள் நினைத்து விட்டால் கிரிக்கெட் மீதான நம்பிக்கையை இழந்து விடுவார்கள் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி கூறி உள்ளார்.
3. ரூ.481 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ரூ.11 கோடி நஷ்டஈடு கொடுத்துள்ளது
ரூ.481 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.11 கோடி நஷ்டஈடு கொடுத்து உள்ளது.
4. டோனி, சுரேஷ் ரெய்னா, ரோகித் அதிக சிக்சர்கள் சாதனை படைக்கப்போவது யார்?
ஐபிஎல் போட்டியில் அதிக சிக்சர்கள் சாதனையை படைக்கப்போவது யார் என்பது தெரியவரும்.
5. முகமது ஷமிக்கு எதிராக கொல்கத்தா காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
முகமது ஷமிக்கு எதிராக கொல்கத்தா காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...